விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – சேரப்போகும் பாரதி, கண்ணம்மா & ஹேமா!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் அடுத்த ட்விஸ்ட் - சேரப்போகும் பாரதி, கண்ணம்மா & ஹேமா!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – சேரப்போகும் பாரதி, கண்ணம்மா & ஹேமா!

பாரதி கண்ணம்மா சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த வகையில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. எனவே இனி வரும் வாரங்களில் அதிகமான ட்விஸ்ட்டுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி புதிய கதைக்களத்துடன் பல்வேறு தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. இருப்பினும் பாரதி கண்ணம்மா சீரியல் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்ரியன் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வினுஷா தேவி என்ற மாடல் தான் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கண்ணம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கண்ணம்மா சொல்ல போகும் உண்மையால் சீரியல் அடுத்த கட்டத்திற்கு போகும் என்றும் வரும் வாரங்களில் எபிசோடுகள் விறுவிறுப்பாக இருக்கு என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது வந்தனர்.

TNPSC குரூப் 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! விண்ணப்ப பதிவு துவக்கம்!

இருப்பினும் நேற்று வெளியான ப்ரோமோ வால் ரசிகர்கள் அதிக ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். அந்த ப்ரோமோவில் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். அப்போது லக்ஷ்மி கண்ணம்மாவிடம் என்னுடைய அப்பா யாருன்னு இன்னைக்கு சொல்றேன்னு சொன்னீகளே யாருமா என்று கேட்க அதற்கு பாரதி உன்னுடைய அம்மாதான் உனக்கு “அப்பா, அம்மா” என்று சொல்லி விட்டார். ரசிகர்கள் இந்த ப்ரோமோவை பார்த்து இந்த தொடர் இப்போதைக்கு முடியாது என்று சமூகவலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.

டாக்டரிடம் பேசுவதால் இனியாவை கண்டித்த ஜெனி, பதிலுக்கு அவமானப்படுத்திய இனியா – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!

இந்த ப்ரோமோவை தொடர்ந்து ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எலியும், பூனையுமாக இருக்கும் பாரதியும் கண்ணம்மாவும் நெருக்கமாக ஒரு ரூமில் செல்பி எடுப்பது போலவும், அவர்களுடன் ஹேமாவும் இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் விரைவில் பாரதியும் கண்ணம்மாவும் சேர உள்ளனர். சீரியலில் வர இருக்கும் காட்சிதான் இந்த புகைப்படங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!