‘பாரதி கண்ணம்மா’ பாரினாவின் கவலையான இன்ஸ்டா பதிவு – ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள்!!

0
'பாரதி கண்ணம்மா' பாரினாவின் கவலையான இன்ஸ்டா பதிவு - ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள்!!
'பாரதி கண்ணம்மா' பாரினாவின் கவலையான இன்ஸ்டா பதிவு - ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள்!!
‘பாரதி கண்ணம்மா’ பாரினாவின் கவலையான இன்ஸ்டா பதிவு – ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள்!!

சின்னத்திரையில் சம துறையை சேர்ந்தவர்களுக்குள் ஏற்படும் எந்த வித கருத்து மோதல்களும், சண்டைகளும் இல்லாமல் ஒருவருக்கொருவர் நட்புடன் இருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அப்படி, விஜே சித்துவுடன் நட்புடன் இருந்த ஃபரீனா அவரை பற்றி நினைவு கூர்ந்து பதிவு ஒன்றை செய்துள்ளார்.

விஜே சித்ரா & ஃபரீனா:

நடிகை சித்ரா இறந்து நேற்றுடன் ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில், அவரது நினைவு நாளை ஒட்டி பல பிரபலங்களும் அவரது புகைப்படங்களையும், அவருடனான நினைவுகளையும் பதிவுகளாக வெளியிட்டு வந்தனர். சின்னத்திரையில் கிட்டத்தட்ட 10 வருட கடின உழைப்பின் பலனாக விஜே சித்ரா அசூர வளர்ச்சியை அடைந்தார். தினமும் சிறிது கூட ஓய்வில்லாமல் இவர் உழைப்பதை பார்த்தவர்கள் அனைவரும் இவரின் கடின உழைப்பை பாராட்டி வந்தனர். சின்ன வயதில் மிகவும் பொறுப்பாக தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற அவரது எண்ணம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

சமையல் போட்டியில் தோற்று போன சரவணன், சந்தியாவை திட்டும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

சித்ரா தனது வருங்கால கணவருடன் ஏற்பட்ட சண்டையினால் தற்கொலை செய்து இறந்து விட்டார். இவரது இறப்பு அவரது குடும்பத்தை மட்டுமல்லாமல், சின்னத்திரை நடிகர்கள் மற்றும் தமிழக மக்களையும் பாதித்தது. சித்ராவின் இறப்பை இன்னும் ஜீரணிக்க முடியாமல் உள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் முதலில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்த போதிலும், அதை மிகவும் சிறப்பாக பயன்படுத்தி வெற்றியை எட்டி பிடிக்க போராடி கொண்டிருந்தார். வெற்றி இவர் கைகளை எட்டி இவரின் புகழ் அதிகரிக்க தொடங்கிய சமயத்தில் சித்ராவின் மரணம் நடந்துவிட்டது.

Vijay TV Big Boss Promo || சாப்பிடாமல் அடம் பிடித்த ராஜு, சமாதானம் செய்த பாவ்னி – நெகிழ்ச்சியான கிளிப்ஸ்!!

நேற்று முதல் வருட இணைவு நாளை ஓட்டி அவருடன் நடித்த சக நடிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் அவரின் நினைவுகளை பகிர்ந்து வந்தனர். சித்ரா உடன் நடிக்கும் சக நடிகர்களிடமும் மிகவும் நட்புடன் பழக கூடியவர். அவரின் நினைவை மறக்க முடியாமல் உள்ளதாக பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஃபரீனா,தனது இன்ஸ்டா பக்கத்தில் சித்ராவின் புகை படங்களை வெளியிட்டு, உன்னுடன் நான் ஒரு புகைப்படம் கூட சேர்ந்து எடுத்துக் கொள்ளாதது வருத்தமாக உள்ளதாக தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சித்ராவை நினைத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!