ஹேமா & லக்ஷ்மியின் பாசத்தில் நெகிழும் கண்ணம்மா – இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு!

0
ஹேமா & லக்ஷ்மியின் பாசத்தில் நெகிழும் கண்ணம்மா - இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு!
ஹேமா & லக்ஷ்மியின் பாசத்தில் நெகிழும் கண்ணம்மா – இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா தனது குழந்தைகள் இருவருடனும் சேர்ந்து கொள்வது போன்ற காட்சிகள் வந்துள்ளது. இதற்கான காட்சிகள் இன்றைய எபிசோடில் வர உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்ள போகும் சமயத்தில் அனைவரும் சென்று அந்த திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர். அப்போது உண்மை தெரிந்து வெண்பா மற்றும் ராகுல் இருவருக்கும் திருமணம் முடிந்து விடுகிறது. அதன்பிறகு வீட்டிற்கு வந்த பின்னர் ஹேமா தான் அநாதை என்பதால் தானே அப்பா இப்படி வெண்பாவை திருமணம் செய்து கொள்ள பொய் சொல்லி விட்டு சென்றார்.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நவ.13 இலவச மாதிரித்தேர்வு!

அதனால், தான் மீண்டும் ஆசிரமத்திற்கே செல்ல இருப்பதாக கூறி வீட்டில் கலாட்டா செய்கிறார். அப்போது, கண்ணம்மா வேறு வழியில்லாமல் நான் தான் உன்ன பெத்த அம்மா என்று உண்மையை சொல்லி விடுகிறார். உன்ன என் கூடவே கூட்டிட்டு போறேன் என்று சொல்லி விடுகிறார். முதலில் யாரும் ஹேமாவை விட மாட்டேன் என்று சொல்ல, கண்ணம்மா பிடிவாதமாக ஹேமாவை அழைத்து செல்வதாக சொல்லி விடுகிறார்.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

கண்ணம்மாவின் வீட்டிற்கு வந்த ஹேமா, உண்மையாகவே நீ தான் என் அம்மாவா? என்று கேட்க, கண்ணம்மா உண்மையாவே நான் தான் உன் அம்மா என்று சத்தியம் செய்கிறார். கண்ணம்மாவும், ஹேமாவும் மாறி மாறி கொஞ்சிக் கொள்வதை பார்த்து லட்சுமி என்ன மறந்திட்டியா அம்மா? என்று வம்பிழுக்கிறார். இதனால் ரெண்டு மகள்களையும் கண்ணம்மா கொஞ்சிவது போல் மகிழ்ச்சியான காட்சிகள் இன்றைய எபிசோடில் வர உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!