விவாகரத்துக்காக கண்ணம்மாவிடம் பேரம் பேசும் பாரதி, கோர்ட்டில் இருந்து வரும் நோட்டிஸ் – இன்றைய எபிசோடு!
கண்ணம்மாவை விவாகரத்து செய்வதற்கு பணம் தருவதாக பேரம் பேசும் பாரதியிடம், தனது குழந்தைக்கு அப்பா தான் வேண்டும் என அவர் கூறுகிறார். தொடர்ந்து விவாகரத்து சம்பந்தமான விசாரணைக்காக கண்ணம்மாவுக்கு கோர்ட்டில் இருந்து நோட்டிஸ் வருகிறது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய எபிசோடில் வெண்பாவின் தூண்டுதலின் பேரில் கண்ணம்மா மீது கோபப்படும் பாரதி அவருடன் பேச வேண்டும் என்று அழைக்கிறார். ஆனால், மருத்துவமனையில் வைத்து பெர்சனல் விஷயங்களை பற்றி பேச வேண்டாம் என்று கண்ணம்மா சொல்ல எனக்கு எப்போது பேச வேண்டுமோ அப்போது தான் நான் பேசுவேன் என பேச ஆரம்பிக்கிறார் பாரதி. அதாவது, விழுப்புரத்தில் இருந்து இதயத்தை எடுத்துக்கொண்டு வந்ததற்கு நீயும் ஒரு காரணம். அதற்காக நான் உன்னை பாராட்டினேன்.
Exams Daily Mobile App Download
ஆனால் இப்போது நான் பேசப்போகிறதற்கும் அதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அன்று உன்னை பாராட்டியதை வைத்து கொண்டு நான் உன்னை ஏற்றுக்கொள்வேன் என்று நினைக்காதே. உன்னை விவாகரத்து செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறுகிறார். அப்போது, நீங்களும் நானும் பிரிந்து தான் இருக்கிறோம். இதற்கு விவாகரத்து அவசியமா என கண்ணம்மா கேட்கிறார். ஆனால், நாம் நிரந்தரமாக பிரிந்து விடுவோம். இதனால் யாருக்கும் பிரச்சனை இல்லை. உனக்கும், உன் குழந்தைக்கும் தேவையானதை நான் தருகிறேன். நீ குழந்தைகள் முன்னால் வெண்பாவை ஏன் கெட்டவள் ஆக்கிறாய்.
உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ கேளு என்று பாரதி கேட்கிறார். அப்போது, என் குழந்தைக்கு அப்பா வேண்டும் என கூறி விட்டு செல்கிறார் கண்ணம்மா. தொடர்ந்து பாரதிக்கு போன் செய்யும் வக்கீல், கோர்ட்டில் கொடுத்த 6 மாத காலம் முடிந்து விட்டதாகவும், அடுத்து விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருவதாகவும் தகவல் சொல்கிறார். இந்த விஷயத்தை கேட்டதும் சந்தோஷப்படுகிறார் பாரதி. மறுபக்கத்தில், கண்ணம்மாவை பார்க்க வீட்டுக்கு வரும் அஞ்சலி, லட்சுமி பாரதி பற்றிய விஷயத்தை தெரிந்து கொண்டது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் லட்சுமி, சித்தி என்று கூறி அஞ்சலியை கட்டி பிடித்துக் கொள்கிறார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இந்த அப்டேட் செய்வது அவசியம்!
இதனால் சந்தோஷப்படும் அஞ்சலி இனிமேல் லட்சுமியிடம் உரிமையோடு பழகலாம் என்று பேசுகிறார். தொடர்ந்து, கண்ணம்மாவுக்கு வக்கீல் அனுப்பிய நோட்டீஸ் வீட்டுக்கு வருகிறது. அப்போது, விவாகரத்து விசாரணைக்காக கோர்ட்டில் இருந்து நோட்டிஸ் வந்திருக்கிறது என அஞ்சலியிடம் பேசிக்கொண்டிருக்கிறார் கண்ணம்மா. அதை கேட்டு விடும் லட்சுமி, அப்பா நம்மை விட்டு பிரியப் போகிறாரா. அவர் எதற்காக உனக்கு விவாகரத்து கொடுக்க விரும்புகிறார். நான் வேண்டுமானால் அப்பாவிடம் பேசவா என்று சொல்லி விட்டு அழுகிறார். இப்போது, லட்சுமியை அஞ்சலி சமாளிப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.