ஹேமாவை பிரித்து விட வேண்டாம் என கண்ணம்மாவிடம் கெஞ்சும் பாரதி – வெளியான ப்ரோமோ!

0
ஹேமாவை பிரித்து விட வேண்டாம் என கண்ணம்மாவிடம் கெஞ்சும் பாரதி - வெளியான ப்ரோமோ!
ஹேமாவை பிரித்து விட வேண்டாம் என கண்ணம்மாவிடம் கெஞ்சும் பாரதி - வெளியான ப்ரோமோ!
ஹேமாவை பிரித்து விட வேண்டாம் என கண்ணம்மாவிடம் கெஞ்சும் பாரதி – வெளியான ப்ரோமோ!

இந்த வாரத்துக்கான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹேமா தன்னுடைய சொந்த மகள் என்று தெரியாத பாரதி, கண்ணம்மாவிடம் சென்று ஹேமாவை தன்னிடம் இருந்து பிரித்துவிட வேண்டாம் என கெஞ்சுவது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சில முக்கியமான திருப்பங்களுடன் வெளியாகி வருகிறது. இதுவரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹேமா யார் என்கிற உண்மை பாரதி மற்றும் 2 குழந்தைகளை தவிர மற்ற அனைவருக்கும் படிப்படியாக தெரிய வருகிறது. அதனால் சௌந்தர்யா குடும்பத்தினர் அனைவரும் பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க திட்டம் போட்டு வருகின்றனர்.

மாநில அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி (DA) உயர்வு – தீபாவளி பரிசு!

அதன் ஒரு பகுதியாக ஹேமாவை அழைத்து கொண்டு போய் அஞ்சலி, கண்ணம்மா வீட்டில் தங்கி இருக்கிறார். இப்போது ஹேமாவை, தன்னிடம் இருந்து கண்ணம்மா பிரித்துவிடுவாளோ என்று பயப்படும் பாரதி ஹேமாவை அழைத்து கொண்டு போக கண்ணம்மா வீட்டுக்கு வருகிறார். அப்போது கண்ணம்மா வீட்டில் அஞ்சலி, ஹேமா, லட்சுமி மூவரும் சேர்ந்து செடிக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கின்றனர். அங்கு வரும் பாரதி, வீட்டுக்கு போகலாம் என கூறிவிட்டு அஞ்சலி மற்றும் ஹேமாவை அங்கிருந்து சொல்லாமல் கொல்லாமல் அழைத்து கொண்டு செல்கிறார்.

PG TRB 2207 காலிப்பணியிடங்கள் விண்ணப்ப பதிவு – வயது வரம்பு நீட்டித்தும் புதிய சிக்கல்!

இந்த விஷயத்தை லட்சுமி வந்து கண்ணம்மாவிடம் சொல்ல அவர் திகைத்து நிற்கிறார். பிறகு மறுநாள் காலையில் கண்ணம்மா வீட்டுக்கு வரும் பாரதி, தன் மகளை தன்னிடம் இருந்து பிரித்து விட வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறார். இப்போது பாரதி அங்கிருந்து சென்றதும் தன்னுடைய சொந்த மகள் தான் ஹேமா என்பதை தெரியாமல் என்னிடம் வந்து கெஞ்சுகிறார் என நினைத்து கொள்கிறார் கண்ணம்மா. இவ்வாறு இந்த வார கதைக்களத்துக்கான புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here