‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் பரினா – புதிய வெண்பா இவங்க தான்! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் பரினா - புதிய வெண்பா இவங்க தான்! ரசிகர்கள் அதிர்ச்சி!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் பரினா - புதிய வெண்பா இவங்க தான்! ரசிகர்கள் அதிர்ச்சி!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் பரினா – புதிய வெண்பா இவங்க தான்! ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாரதி கண்ணம்மா’வில் நடிகை பரினா நடித்து வந்த வெண்பா கதாப்பாத்திரத்தில் அவருக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலம் அனிதா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அனிதா

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருவது விஜய் டிவி சீரியல் பிரபலங்களின் விலகல் குறித்த செய்திகள் தான். அதில் குறிப்பாக பார்வையாளர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சில புதிய மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் இந்த சீரியலில் தொடர மாட்டார் என சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன அபிஷேக் – ரசிகர்கள் ஷாக்!

இது தவிர இந்த சீரியலின் லீட் கதாப்பாத்திரமான கண்ணம்மா வேடத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினியும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்களின் உண்மை நிலவரம் தெரியாத பட்சத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் வெண்பா கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் பிரபலம் அனிதா நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தொடர்பான சில எடிட்டுகளில் அனிதா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

இந்த அனிதா பிரபல டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் கடந்த ஆண்டில் வெளியான ‘பிக்பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சி உட்பட சில தமிழ் திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வந்தார். இப்போது பிக்பாஸ் பிரபலம் அனிதா மீண்டுமாக விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!