
விபத்தில் இறந்து விடும் பாரதி & கண்ணம்மா, பிரிந்து போகும் குழந்தைகள் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அதிரடி திருப்பங்கள்!
பிரபலமான சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டு விட்டது. இந்த சீரியல் 2 குழந்தைகளை மையமாக வைத்து நகர போகிறது. இதனால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இது குறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.
சீசன் 2:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஒரு பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இருப்பினும் இந்த சீரியலில், எப்போதுதான் கண்ணம்மாவும் பாரதியும் சேருவாங்க எப்போ சீரியல் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இயக்குனர் இந்த சீரியலை ஜவ்வு போல இழுக்குறாரே என ரசிகர்கள் இடையில் சலிப்பும் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் தெலுங்கு வெர்சனான கார்த்திகை தீபத்தின் ரீமேக் ஆகும்.
TN Job “FB
Group” Join Now
தெலுங்கில் இந்த சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் பிரச்சனை அனைத்துமே முடிந்து உள்ளது. வெண்பாவை சமாளிக்க முடியாமல் கதையை வேறு ட்ராக்கிற்கு கொண்டு போயுள்ளனர். ஆனால் விஜய் டிவியில் இன்னும் எந்த ஒரு உண்மையும் வெளிவராமல் இருப்பது ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கில் பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாவது பார்ட் ஆரம்பமாகியுள்ளது. அதில் பாரதியும் கண்ணம்மாவும் ஒரு விபத்தில் இறந்து விட்டனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமைகளில் விடுமுறை? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
இதையடுத்து ஹேமாவும் லட்சுமியும் ஒரு சின்ன மனஸ்தாபத்தில் சிறுவயதிலேயே பிரிந்து விடுகின்றனர். பல வருடங்களுக்கு பிறகு அவர்கள் வளர்ந்து பெரிய ஆளாக மாறி ஒருவரை ஒருவர் சந்திப்பார்களா? குடும்பம் ஓன்று சேருமா இதுவே இந்த கார்த்திகை தீபம் சீரியலின் சீசன் 2 கதையாகும். இந்நிலையில் இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது, வீட்டை விட்டு பிரித்த ஹேமா வளர்ந்தபின் ஆட்டோ டிரைவராகவும், லட்சுமி அவுங்க அப்பா போல டாக்டர் ஆகவும் ஆகிவிடுகின்றனர். இவர்கள் இருவர்களை அடிப்படையாக வைத்து கார்த்திகை தீபம் கதை நகர உள்ளது. மேலும் தமிழ் பாரதி கண்ணம்மாவிலும் அப்படி ஒரு நிலை வருமா?? விரைவில் சீசன் 2 வர உள்ளதா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.