புதிய வாகனங்களுக்கு BH (Bharath Series) எண் பதிவு – மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம்!

0
புதிய வாகனங்களுக்கு BH (Bharath Series) எண் பதிவு - மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம்!
புதிய வாகனங்களுக்கு BH (Bharath Series) எண் பதிவு - மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம்!
புதிய வாகனங்களுக்கு BH (Bharath Series) எண் பதிவு – மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம்!

புதிய வாகனங்களை ஒரு மாநிலம் விட்டு மற்ற மாநிலத்திற்கு தடையின்றி மாற்றுவதற்கு வசதியாக, வாகன பதிவின் போது BH என்று துவங்கும் Bharat series எண்ணை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

BH பதிவு

ஒரு வாகனத்தை புதிதாக வாங்கும் போது அந்த மாநிலத்துக்கான வாகன பதிவு (தமிழ்நாடு – TN) என்று செய்யப்படும். இந்த பதிவு கொண்ட வாகனங்களை மற்ற மாநிலங்களுக்கு எடுத்து செல்லும் போது, அந்த மாநிலங்களில் வாகனங்களை ஓட்டி செல்வதற்கு வாகன பதிவை மாற்ற வேண்டும். இப்படி மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்கள் அனைத்திற்கும் புதிய பதிவு எண்ணை மாற வேண்டும் என்பதால், இதில் ஏற்பாடு சிரமங்களை தவிர்க்க புதிய வாகன பதிவில் BH என துவங்கும் Bharat series பதிவு எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Tokyo Paralympics 2020: இந்தியாவிற்கு முதல் பதக்கம் உறுதி! இறுதிப்போட்டியில் பவினா படேல்!

அந்த வகையில் வாகனத்தின் உரிமையாளர் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது BH பதிவு அடையாளத்தைக் கொண்ட ஒரு வாகனத்திற்கு, புதிய பதிவு அடையாளத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, பாரத் தொடர் (Bharat series) இன் கீழ் இந்த வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.

ENG vs IND 3வது டெஸ்ட் – கோஹ்லிக்கு முன் மைதானத்திற்குள் பேட் உடன் நுழைந்த நபர்! மீண்டும் பரபரப்பு!

இந்த பதிவின் கீழ் மோட்டார் வாகன வரி, இரண்டு வருடங்களுக்கு அல்லது இரண்டு மடங்காக விதிக்கப்படும். இந்த திட்டம் ஒரு புதிய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் போது இந்தியாவின் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் முழுவதும் தனிப்பட்ட வாகனங்களை இலவசமாக நகர்த்த உதவும். தொடர்ந்து பதினான்காம் ஆண்டு நிறைவடைந்த பிறகு, அந்த வாகனத்திற்கு முன்பு வசூலிக்கப்பட்ட தொகையில் பாதியாக இருக்கும் மோட்டார் வாகன வரி ஆண்டுதோறும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!