‘பாக்கியலட்சுமி’ சீரியல் அம்ரிதாவுக்கு திருமணம்? அவரே கூறிய விளக்கம்!

0
பாக்கியலட்சுமி' சீரியல் அம்ரிதாவுக்கு திருமணம்
பாக்கியலட்சுமி' சீரியல் அம்ரிதாவுக்கு திருமணம்

‘பாக்கியலட்சுமி’ சீரியல் அம்ரிதாவுக்கு திருமணம்? அவரே கூறிய விளக்கம்!

விஜய் டிவியில் தற்போது டாப் மோஸ்ட் சீரியலில் ஒன்றாக வளம் வரும் பாக்கியலட்சுமி தொடர் இரண்டாவது மகனான எழில் அவர்களின் காதலியாக நடித்து வரும் அமிர்தா அவரது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ரித்திகா திருமணம் :

இல்லத்தரசிகளே மையமாக கொண்டு ஆரம்பமாகிய பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவுக்கு இரண்டு மகன்கள் அதாவது மூத்த மகன் செழியன் மற்றும் இளைய மகன் எழில் இருவரில் இரண்டாவது மகன் தான் அம்மா மீது மிகவும் பாசமுள்ள மகன் ஆவான். இவ்வாறு பாசமுள்ள மகன் கதையில் ஒரு பெண் என்ட்ரி கொடுத்தவர் தான் அமிர்தா. இவர் வெறுமென ஒரு சப்போர்டிங் ரோல் ஆக மட்டும் வளம் வராமல் ஒரு விதவை தாயாகவும், மறுமணம் செய்து கொள்வதில் இருக்கும் சமூக சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு இளம் பெண்ணாகவும், ஒரு புரட்சிகரமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

இவர் பலரும் அறியாத வகையில் ரியாலிட்டி ஷோக்கள் ஆன நம்மவர் கமல், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி, பல்வேறு டிவி விளம்பரங்கள், குறும்படங்கள் என பல முக்கிய வேடத்தில் கலந்து நடித்து இருந்தாலும் கூட அவருக்கென தனி இடம் அமைந்ததில்லை. ஏன்! இதில் மறுக்கமுடியாத கசப்பான உண்மை என்னவென்றால், பாக்கியலட்சுமி சீரியல் வழியாக கூட இவருக்கு பெரிய அளவிலான பிரபலத்தன்மைகிடைக்கவில்லை. ஆனால் ஒரு போட்டியாளராக தான் கலந்துகொண்ட குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ஒன்று வழியாக எக்கச்சக்கமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் ரித்திகாவை மொத்தம் 1.6 மில்லியன் பேர் பிடித்து பின்தொடர்கிறார்கள். அந்த வகையில் நேற்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வழியாக ரசிகர்களுடன் கலந்துரையாடும் நோக்கத்தின் கீழ், “என்னிடம் ஒரு கேள்வி கேளுங்கள்” என்று பதிவு செய்திருந்தார். அதற்க்கு பல ரசிகர்கள் கேள்வி வினா வழியாக பல கேள்விகளை கேட்டிருந்தார்கள். அதற்க்கு பதில் அளித்து வந்தவர் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.

அது தான் இங்க ஹைலைட்டே. ஏனென்றால் ரித்திகாவின் ரசிகர் ஒருவர் “எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க?” என்று கேட்க, அதற்கு ரித்திகா வாய் வார்தையாக எந்த பதிலையும் அளிக்காமல், “நம்ம கையில என்ன இருக்கு.. எல்லாம் நம்ம தலையெழுத்துபடி தான் நடக்கும்” என்கிற பாணியிலான சைகையை காட்டி ரசிகர்களை புன்னகைக்க வைத்துள்ளார். இவ்வாறு அதிகமாக அவர் கல்யாணம் குறித்தே பல கேள்விகள் ரசிகர்கள் கேட்டிருந்தார்கள். அவரும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஸ்வீட் ஆக பதிலளித்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!