கோபி ராதிகா திருமணத்திற்கு சமையல் ஆர்டர் வாங்கிய பாக்கியா, வெடிக்கப்போகும் பூகம்பம்? பாக்கியலட்சுமி ப்ரோமோ!

0
கோபி ராதிகா திருமணத்திற்கு சமையல் ஆர்டர் வாங்கிய பாக்கியா, வெடிக்கப்போகும் பூகம்பம்? பாக்கியலட்சுமி ப்ரோமோ!
கோபி ராதிகா திருமணத்திற்கு சமையல் ஆர்டர் வாங்கிய பாக்கியா, வெடிக்கப்போகும் பூகம்பம்? பாக்கியலட்சுமி ப்ரோமோ!
கோபி ராதிகா திருமணத்திற்கு சமையல் ஆர்டர் வாங்கிய பாக்கியா, வெடிக்கப்போகும் பூகம்பம்? பாக்கியலட்சுமி ப்ரோமோ!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என முடிவோடு இருக்க, ராதிகாவின் குடும்பமும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் கோபி பாக்கியாவின் திருமணத்தில் பாக்கியா செய்ய போகும் அதிரடி சம்பவம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் இனி வரும் எபிசோடுகளில் பல அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. பாக்கியா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்களை பற்றி நினைக்காமல் தொழிலில் முன்னேற வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் பாக்கியாவிற்கு பெரிய திருமண மண்டபம் ஒன்றில் சமையல் ஆர்டர் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதை நினைத்து பாக்கியா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

இதற்கிடையே ராதிகாவை திருமணம் செய்ய சொல்லி கோபி பல முறை கேட்டும் ராதிகா அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் ராதிகாவின் குடும்பத்தினர் உடனே ராதிகா கோபி திருமணத்தை நடத்த வேண்டும் என சொல்ல, அதை மறுக்க முடியாமல் ராதிகா இருக்கிறார். இந்நிலையில் இனி வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியாவிற்கு சமையல் ஆர்டர் கொடுப்பவரிடம் கோபி ராதிகாவின் திருமணத்திற்கு ஆர்டர் கொடுக்க கோபியும் சந்துருவும் வருகின்றனர்.

தொழிலில் முன்னேறிய பாக்கியா, கோபி முன் பாராட்டிய தொழிலதிபர் – சீரியலில் அடுத்து வருபவை!

Exams Daily Mobile App Download

அவர் அந்த பொறுப்பை பாக்கியாவிடம் கொடுக்கிறார். பெரிய சமையல் ஆர்டர் வந்த நிலையில் பாக்கியாவும் ஜெனியும் அது கோபி ராதிகா திருமண விழா என தெரியாமல் சமையல் செய்ய ஒப்புக் கொள்கின்றனர். தனது கணவர் திருமணம் என தெரியாமல் ஆர்டர் வாங்கியதை நினைத்து பாக்கியா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். உண்மை தெரிய வரும் போது பாக்கியாவின் மன நிலை எப்படி இருக்கும் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!