கோபியை ஏற்றுக்கொள்ள சொல்லி கெஞ்சும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!

0
கோபியை ஏற்றுக்கொள்ள சொல்லி கெஞ்சும் பாக்கியா - ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை ஏற்றுக்கொள்ள சொல்லி கெஞ்சும் பாக்கியா - ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை ஏற்றுக்கொள்ள சொல்லி கெஞ்சும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!

பாக்கியாவை கோபி ஏமாற்றியது தெரிந்ததுமே கோபியை மொத்தமாக வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிந்துவிட்டார். இந்நிலையில், கோபியை ஏற்றுக்கொள்ள சொல்லி பாக்கியா கோபியிடம் கெஞ்சும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது தான் பாக்கியாவின் தைரியமான முகத்தை பார்க்க முடிகிறது. எப்படியும் பாக்கியாவிற்கு உண்மைகள் அனைத்தும் தெரிந்த பிறகு அழுது புலம்புவார் என எதிர்பார்த்த நேரத்தில் தைரியமாக கோபிக்கு நேருக்கு நேர் நின்று குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். கோபிக்கு பாக்கியா விவாகரத்து கொடுத்ததை கோபியாலேயே நம்ப முடியவில்லை. கோபிக்கும் பாக்கியாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை தெரியவந்ததும் கோபியை அப்படியே வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிந்துவிட்டார்.

ஆனால், குடும்பத்தினர்கள் அனைவரும் விவாகரத்து செய்ய வேண்டாம் என பாக்கியாவை தடுத்தனர். ஆனாலும், பாக்கியா கேட்காமல் கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். தற்போது வீட்டை விட்டு கிளம்ப அனைத்து துணிகளையும் பேக் செய்து வருகிறார். அதனை, பார்த்ததும் கோபி இனிமேல் ஒரு நிமிடத்திற்கு மேல் இங்கு இருக்க கூடாது என பாக்கியாவை திட்டிவிட்டு பெட்டியை தூக்கி எறிகிறார். அப்போது அந்த பெட்டியில் பாக்கியா, கோபியின் துணிமணிகளை பேக் செய்து கொண்டு வந்திருக்கிறார்.

கதிர் கடை திறப்பு விழாவிற்கு வந்த தனம், வீட்டிற்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை கூப்பிடும் கஸ்தூரி – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

அதனை பார்த்ததும் குடும்பத்தினர்கள் அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். பின்னர், பாக்கியா நான் எதற்காக இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். அனைத்து தவறையும் செய்தது நீங்கள் தான். நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் தெருவிற்கு செல்ல வேண்டுமா. இது என் குடும்பம் நீங்கள் தான் வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என பாக்கியா கோபியிடம் கூறுகிறார். பாக்கியா சொல்வது தான் சரி என ராமமூர்த்தி தாத்தாவும் பாக்கியாவுக்கு ஆதரவாக பேசுகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாக்கியா நான் செய்தது தவறு தான் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என கோபியிடம் கெஞ்சும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here