பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக 2வது காரணம் – ஜெனிபர் (ராதிகா) வீடியோ வெளியீடு!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக 2வது காரணம் - ஜெனிபர் (ராதிகா) வீடியோ வெளியீடு!
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக 2வது காரணம் - ஜெனிபர் (ராதிகா) வீடியோ வெளியீடு!
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக 2வது காரணம் – ஜெனிபர் (ராதிகா) வீடியோ வெளியீடு!

சின்னத்திரை வரலாற்றில் விஜய் டிவி சீரியல்கள் கொடிகட்டி பறந்து வருகின்றன. பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பாக்கிய லட்சுமி சீரியலில் இருந்து முன்னணி நடிகை ஜெனிபர் வெளியேறியதற்கான இரண்டாவது காரணத்தை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் டிவியில் பல பிரபலமான சீரியல்கள் இருந்து வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. காரணம் அந்த சீரியலில் குடும்ப பெண்கள் குறித்த கஷ்டங்களையும் அதனை எவ்வாறு சமாளித்து முன்னேறி வருவது போன்ற கதைக்களம் இருப்பது தான். அந்த சீரியலில் நடிகை சுசித்ரா ஷெட்டி, பாக்கியலட்சுமியாக நடித்து வருகிறார். இவரது கணவர் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகிறார். இந்த தம்பதியருக்கு செழியன், எழில், இனியா என்ற 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்களுடன் கோபியின் தாய் மற்றும் தந்தை அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் நடிகை நந்திதா ஜெனிபர், ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

வீல்சேரில் வீடு திரும்பினார் VJ அர்ச்சனா, ரசிகர்கள் நிம்மதி – வெளியான வீடியோ!

ஜெனிபரும், பாக்கியாவின் கணவரும் நட்பாக பழகி வருகின்றனர். அதே நேரத்தில் பாக்கியாவும், ஜெனிபரும் தோழிகளாக உள்ளனர். அவருக்கு அதிக உதவிகளை பாக்கியா செய்கிறார். இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான ராதிகா கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிபர் திடீரென அந்த சீரியலை விட்டு விலகி உள்ளார். ஏற்கனவே இது குறித்து ஒரு காரணத்தை வீடியோவாக பதிவிட்ட நிலையில் தற்போது இரண்டாவது காரணத்தை வெளியிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதாவது அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். அவருக்கு தற்போது 6 மாதம் ஆகிறது. அதனால் தான் சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக அவர் கர்ப்பமாக உள்ளார். மேலும் பெண் குழந்தை வேண்டும் என வாழ்த்துங்கள் என தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா நடித்து வந்தாலும், நடிகை நந்திதா ஜெனிபர் கதாபாத்திரம் அவருக்கு தான் பொருத்தமாக இருந்தது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!