அமிர்தாவிடம் காதலை சொல்ல கிளம்பும் எழில், ராதிகாவின் அம்மாவை சமாதானம் செய்யும் கோபி – இன்றைய எபிசோடு!

0
அமிர்தாவிடம் காதலை சொல்ல கிளம்பும் எழில், ராதிகாவின் அம்மாவை சமாதானம் செய்யும் கோபி - இன்றைய எபிசோடு!
அமிர்தாவிடம் காதலை சொல்ல கிளம்பும் எழில், ராதிகாவின் அம்மாவை சமாதானம் செய்யும் கோபி - இன்றைய எபிசோடு!

அமிர்தாவிடம் காதலை சொல்ல கிளம்பும் எழில், ராதிகாவின் அம்மாவை சமாதானம் செய்யும் கோபி – இன்றைய எபிசோடு!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பல்வேறு கனவுகளுடன் அமிர்தாவிடம் தனது காதலை சொல்ல புறப்படுகிறார் எழில். மறுபக்கத்தில் ராதிகாவை பார்க்க செல்லும் கோபி அவரது அம்மாவிடம் பேசி அவரை சமாதானம் செய்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

இதுவரை ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஒரு வழியாக ராதிகாவை சமாதானம் செய்து விட்டு வீட்டுக்கு வருகிறார் கோபி. காரில் வந்து கொண்டிருக்கும் போது எனக்கு ராதிகா வேணும், ராதிகாவுக்காக யாரை வேண்டுமானாலும் விட்டு கொடுப்பேன் என அவரது நண்பரிடம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார் கோபி. வீட்டில் பாக்கியாவும், இனியாவும் பேசிக்கொண்டிருக்க எழில் அங்கு வருகிறார்.

கண்ணம்மாவை விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு கிளம்பும் பாரதி, சோகத்தில் குடும்பம் – இன்றைய எபிசோடு!

அப்போது பாக்கியா மற்றும் இனியாவுக்கு வாங்கி வந்த வாட்ச்சை அவர்களிடம் கொடுக்க இருவரும் சந்தோஷமடைகின்றனர். பிறகு அமிர்தாவின் பிறந்தநாளை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பாக்கியா, அவருக்கு கிப்ட் வாங்கியாச்சா என கேட்டு விட்டு அமிர்தாவுக்கு போன் செய்து வாழ்த்து சொல்கிறார். பிறகு இனியாவும் அமிர்தாவுக்கு வாழ்த்து சொல்கிறார். பாக்கியா அமிர்தாவுக்கு ஸ்வீட் செய்து கொடுக்க அதனை எடுத்துக்கொண்டு அமிர்தாவை பார்க்க செல்கிறார் எழில்.

அப்போது எழில் அவரது நண்பரிடம் பேசிக்கொண்டிருக்க அமிர்தாவுக்கு வாட்ச் வாங்கியதற்கு பதிலாக ஒரு மோதிரம் வாங்கி ப்ரொபோஸ் செய்திருக்கலாம் என கூறுகிறார். இப்போது அமிர்தாவுக்கு எப்படி ப்ரொபோஸ் செய்வது என நினைத்து பார்த்து பூரிப்படைகிறார் எழில். மறுபக்கத்தில் கோபி ராதிகாவை பார்க்க வர அவரை பார்த்ததும் கோபத்தில் பேசுகிறார் ராதிகாவின் அம்மா. நீங்க இங்க வர்றது நன்றாக இல்லை என ராதிகாவின் அம்மா கூற நான் எதோ டைம் பாஸ் பண்ண இங்க வரல, எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கா, எனக்கு மயூவும் சொந்த குழந்தை மாதிரி தான் என பேசுகிறார் கோபி.

ஜீ தமிழ் சீரியல் நடிகை ரேஷ்மா கல்யாணத்தில் ஜோடியாக கலந்து கொண்ட ஆர்யன், ஷபானா – வைரல் வீடியோ!

இப்போது பாக்கியாவின் வீட்டில் செல்வி, தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் பைக்கில் செல்வதாக பாக்கியாவிடம் சொல்லி விட்டு அழுகிறார். ஆனால் உன் புருஷன் இப்படி பண்ணா நீ என்ன செய்வ என பாக்கியாவிடம் செல்வி கேட்க நீ சொன்ன மாதிரி கோபியை ஒரு பெண்ணுடன் பார்த்தால் என் இதயமே நின்று விடும் என வருந்துகிறார் பாக்கியா. இப்போது அமிர்தாவின் வீட்டுக்கு செல்கிறார் எழில். அங்கு அமிர்தாவின் மாமனார், மாமியாரிடம் பேசிக் கொண்டிருக்க அமிர்தா வருகிறார். அப்போது பாக்கியா கொடுத்த ஸ்வீட்டை அமிர்தாவிடம் கொடுத்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறார் எழில்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here