விஜய் டிவி CWC நடிகர் புகழுக்கு விரைவில் டும் டும் – குவியும் வாழ்த்துக்கள்!

0
விஜய் டிவி CWC நடிகர் புகழுக்கு விரைவில் டும் டும் - குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் டிவி CWC நடிகர் புகழுக்கு விரைவில் டும் டும் - குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் டிவி CWC நடிகர் புகழுக்கு விரைவில் டும் டும் – குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நடிகர் புகழ். தற்போது இவரது திருமண தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை புகழ் உறுதிப்படுத்தி உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குக்கு வித் கோமாளி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் புகழ். கடந்த 2008ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்த இவர், ஒரு மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் 2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா நிகழ்ச்சியின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி உள்ளார். அதற்கு பின் புகழ் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவர்க்கு மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து தந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரையும் மகிழ்வித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இதனை தொடர்ந்து புகழுக்கு திரையுலக பட வாய்ப்புகள் வர தொடங்கின. சமீபத்தில் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் புகழ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து புகழ் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார். இந்த நிலையில் விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகின.

CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2023 எப்போது? கல்விவாரியம் விளக்கம்!

இதை அடுத்து புகழ் கடந்த சில ஆண்டுகளாக கோவையை சேர்ந்த பென்சியா என்ற பெண்ணை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த செய்தியை புகழ் உறுதி செய்திருந்த நிலையில் காதலியின் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். மேலும் சமீபத்தில் வெளியான ப்ரீ வெட்டிங் ஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து புகழின் திருமணம் செப்டம்பர் 5 நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திருமண பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருவதால் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!