சிறந்த மனைவிக்கான விருது பெற்ற “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!

0
சிறந்த மனைவிக்கான விருது பெற்ற
சிறந்த மனைவிக்கான விருது பெற்ற "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மீனா ஹேமா - வைரலாகும் வீடியோ!
சிறந்த மனைவிக்கான விருது பெற்ற “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஸ் சிறந்த மனைவிக்கான விருதை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி கையால் வாங்கி இருக்கிறார். அது குறித்து அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

நடிகை ஹேமா சதீஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பலரது மனதை கவர்ந்த சீரியல் ஆகும். இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரமே இல்லாத நிலையில், அவ்வப்போது தனது வில்லத்தனத்தால் மீனா கதாபாத்திரம் அந்த இடத்தை பிடித்திருப்பார். மீனாவாக நடிகை ஹேமா சதீஸ் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கர்ப்பகாலத்தில், பிரசவத்தின் போதும் கூட அவர் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். சீரியல் மட்டுமல்லாமல் அவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

“என்னுடைய நிலைமைக்கு நீங்க தான் காரணம்” கார்த்திக்கிடம் கோவப்பட்ட சத்யா – “மௌன ராகம் 2” ப்ரோமோ ரிலீஸ்!

அதில் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை ஃபலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் யூடுயூப் சேனலில் இருந்து சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு பல விருதுகள் கொடுக்கப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் ஆரி கலந்து கொண்டார். அவர் பல விருதுகளை வழங்கிய நிலையில், சின்னத்திரை சீரியல்களில் சிறந்த மனைவி என்ற விருதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா சதீஸிற்கு கொடுத்தார். அதை சந்தோசத்துடன் ஹேமா பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு பேசிய அவர் எனக்கு சிறந்த மனைவிகான விருது கொடுத்ததற்கு மிகவும் சந்தோசம் என சொல்ல சென்ற ஆண்டும் உங்களுக்கு தான் கொடுத்தோம் என சொல்ல அதை நினைத்து மிகவும் சந்தோசமாக இருப்பதாக ஹேமா சொல்லி இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு கஷ்டப்பட்டு படப்பிடிப்புகளை ஒத்தி வைத்துவிட்டு வந்திருப்பதாக சொல்லி இருக்கிறார். மேலும் தன்னுடைய வெற்றிக்கு பின்னால் என்னுடைய கணவர் தான் இருப்பதாக அவர் நெகிழ்ச்சியாக சொல்லி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here