Jio நிறுவனத்தில் சிறந்த ரீசார்ஜ் பேக் – 90 நாட்களுக்கான புதிய திட்டம்!

3
Jio நிறுவனத்தில் சிறந்த ரீசார்ஜ் பேக் - 90 நாட்களுக்கான புதிய திட்டம்!
Jio நிறுவனத்தில் சிறந்த ரீசார்ஜ் பேக் - 90 நாட்களுக்கான புதிய திட்டம்!
Jio நிறுவனத்தில் சிறந்த ரீசார்ஜ் பேக் – 90 நாட்களுக்கான புதிய திட்டம்!

இந்தியவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள ஜியோ யூஸர்களுக்கு தற்போது மற்றொரு மொபைல் ரீசார்ஜ் பேக்கை அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம்:

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் மிக விரைவான வளர்ச்சியை எட்டி வருகிறது. தற்போது அனைத்து தேவைகளையும் மக்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்து வருகின்றனர். நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல தொலைதொடர்பு நிறுவனங்கள் இருந்து வந்தன. ஆனால் தற்போது ஜியோ நிறுவனம் அனைத்து மக்களும் பயன்படுத்தும் விதமாக பல சலுகை ரீசார்ஜ் பேக்கை அறிமுகம் செய்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஜியோ சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜியோ நிறுவனம் நாட்டில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின சலுகையாக ரூ.2,999-க்கான ப்ரீ-பெய்டு ரீசார்ஜ் பேக்கை 100% வேல்யூவுடன் அறிவித்தது. இந்த பிளான் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழு வருடத்திற்கு தினசரி 2.5GB டேட்டாவை வழங்குகிறது, இது 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த நிலையில் ஜியோ நிறுவனம் மற்றொரு மொபைல் ரீசார்ஜ் பேக்கை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.750 மதிப்புள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் குளிக்க தடை – தீயணைப்பு துறையினர் எச்சரிக்கை!

Exams Daily Mobile App Download

இந்த புதிய பிளானில் ஜியோ நிறுவனம் தினசரி 2 GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் யை வழங்குகிறது. இதை தொடர்ந்து புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் தற்போது MyJio ஆப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஜியோ-வின் புதிய ரூ.750 ப்ரீபெய்ட் பிளான், மொத்தம் 90 நாட்களுக்கு 180GB டேட்டாவை வழங்குகிறது. அதாவது பிளானின் மூலம் யூஸர்கள் ஒவ்வொரு நாளும் 2GB டேட்டா பெனிஃபிட்டை பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 100SMS மற்றும் JioSaavan, JioCinema மற்றும் பிற Jio ஆப்ஸ்களுக்கான காம்ப்ளிமென்ட்ரி அக்சஸும் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. Jio network ஆரம்பித்த காலத்தில் குறைவான கட்டணம்.இப்போது மிக மிக
    கட்டணம் அதிகம்.
    Network very very slow.so sad.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!