“விஜய் டெலிவிஷன் அவார்ட்” நிகழ்ச்சியில் சிறந்த ஜோடி விருதை வென்றவர்கள் யார் தெரியுமா? ரசிகர்கள் வாழ்த்து!

0
"விஜய் டெலிவிஷன் அவார்ட்" நிகழ்ச்சியில் சிறந்த ஜோடி விருதை வென்றவர்கள் யார் தெரியுமா? ரசிகர்கள் வாழ்த்து!
“விஜய் டெலிவிஷன் அவார்ட்” நிகழ்ச்சியில் சிறந்த ஜோடி விருதை வென்றவர்கள் யார் தெரியுமா? ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி நட்சத்திரங்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் “விஜய் டெலிவிஷன் அவார்ட்” வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சிறந்த ஹீரோ மற்றும் ஹீரோயின் விருதை தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் நடித்து வரும் வினோத் பாபு மற்றும் பவித்ரா பெற்றுள்ளனர்.

விஜய் டெலிவிஷன் அவார்ட்:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் ஒளிபரப்புவதில் சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில் விஜய் டிவி நட்சத்திரங்களையும் கலைஞர்களையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் விதமான ஆண்டுதோறும் விஜய் டெலிவிஷன் அவார்ட் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த சீரியல், நிகழ்ச்சி, நடிகர் நடிகர்களுக்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது.

ஜீவா பற்றி பேசி வருத்தப்படும் மூர்த்தி, பரிகாரம் வேண்டாம் என சொல்லும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அது குறித்த முன்னோட்டமாக சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் விஜய் டெலி அவார்ட்ஸ் விருது பெற்றவர்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சிறந்த சீரியலுக்கான விருதை பாக்கியலட்சுமி சீரியல் பெற்றுள்ளது. சிறந்த ஹீரோ மற்றும் ஹீரோயின் விருதை தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்து வரும் வினோத் பாபு மற்றும் பவித்ரா பெற்றுள்ளனர்.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் நாயகியாக நடித்து வரும் சுசித்ரா, சிறந்த அம்மாவிற்கான விருதை பெற்றுள்ளார். சிறந்த அப்பா நடிகராக ஜெபமாலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வில்லனாக பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகையாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ரேஷ்மா தேர்வு செய்யப்பட்டார். சிறந்த குடும்பம் விருது, கூட்டு குடும்ப வாழ்க்கையை விவரிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here