சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி – ரீஎன்ட்ரி கொடுத்த பென்னி தயாள்!

0
சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி - ரீஎன்ட்ரி கொடுத்த பென்னி தயாள்!
சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி - ரீஎன்ட்ரி கொடுத்த பென்னி தயாள்!
சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி – ரீஎன்ட்ரி கொடுத்த பென்னி தயாள்!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனி கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்த பென்னி தயாள் மீண்டும் வந்துள்ளார். இதனால் அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பென்னியின் ரீஎன்ட்ரி:

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள் தான். இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகளுக்கு என்றும், பெரியவர்களுக்கு என்றும் தனி தனியாக நடந்து வருகிறது. இதை போல பல சேனல்களிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப தொடங்கினாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இசைத்துறையின் பெரிய பெரிய ஜாம்பவான்கள் வருவார்கள்.

தமிழகத்தில் முடிவுக்கு வந்த தேர்தல் பிரச்சாரம் – நாளை மறுநாள் (பிப்.19) பொது விடுமுறை!

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முதல் முடிந்து போன கடைசி சீசன் வரை அனைத்து சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் தற்போது வெள்ளித்திரையில் முக்கிய பாடகர்களாக உள்ளனர். இவை அனைத்தும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக கிடைத்த வாய்ப்புகள் தான். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வரும் இசையமைப்பாளர்கள் தங்களது இசையில் பாடகர்களை பாட வைப்பதாக நிகழ்ச்சியிலேயே அறிவித்து செல்லும் சம்பவங்கள் பல நடந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சூப்பர் சிங்கர் சீசன் 8ல் நடுவராக இருந்து வந்த பென்னி தயாள், ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதன் காரணமாக சில சர்ச்சையில் சிக்கினார். இதனால் மிகவும் நெகட்டிவ் வகையிலான கருத்துக்கள் அவர் மீது வைக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த பென்னி தான் இனி எந்த சூப்பர் சிங்கர் சீசனிலும் நடுவராக கலந்து கொள்ளப்போவதில்லை என்று கூறி விலகினார். தற்போது வெளிவந்த அரபிக் குத்து பாடலுக்கு, பிரியங்கா, மாகாபா மற்றும் பென்னி தயாள் மூவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து டிக் டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் பென்னி மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்பதை ரசிகர்கள் உறுதி செய்து விட்டனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here