கொரோனா பரவலால் 144 தடை உத்தரவு அமல் – மாநகராட்சி அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 144 தடை உத்தரவு மறுஅறிவிப்பு வரும் வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த முடிவுகளை மாநில அரசே எடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 4266 புதிய நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூரு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், நிகழ்ச்சி அரங்குகள் போன்றவை செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசுகள் நடவடிக்கை!!
மேலும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை எந்த ஒரு பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட கூடாது எனவும், ஷாப்பிங் மால்கள், சந்தைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வாடிக்கையாளர்கள் கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




