Post Office ன் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் நன்மைகள் – முழு விவரம் இதோ!

0
Post Office ன் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் நன்மைகள் - முழு விவரம் இதோ!
Post Office ன் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் நன்மைகள் - முழு விவரம் இதோ!
Post Office ன் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் நன்மைகள் – முழு விவரம் இதோ!

இந்தியாவில் பெண் குழந்தைகளின் சேமிப்பு திட்டத்திற்காக பல்வேறு வகையான சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு செல்வ மகள் சேமிப்பு திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கிடைக்கும் பலன்களை பற்றி பார்ப்போம்.

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

இந்தியாவில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு பெண் குழந்தைகளுக்காக செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மற்ற திட்டங்களில் கிடைக்கும் வட்டி தொகையை விட அதிகமான லாபங்கள் கிடைக்கிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட எதிர்கால செலவினங்களை சுலபமான முறையில் எதிர் கொள்வதே ஆகும். தற்போது இத்திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

Exams Daily Mobile App Download

 

இந்த திட்டத்தின் தொடக்க காலத்தில் ஆண்டுக்கு 9.1% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது ஆண்டுக்கு 7.6% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் கணக்கை தொடங்கலாம். மேலும் இத்திட்டத்தில் பெண் குழந்தையின் 18 வயது எட்டும் போது திருமணத்திற்காக முழு சேமிப்புத் தொகையும் அத்துடன் உயர் படிப்பிற்காக சேமிப்பு பணத்தில் 50% தொகையும் பெற முடியும். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகள் வரை இந்த திட்டத்தில் தனித்தனியாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு – புதிய கல்வி கொள்கை குறித்து அமைச்சர் விளக்கம்!

அதனால் பெற்றோர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் முடிவதற்குள் பெற்றோர்கள் இறந்து விட்டால் இந்த திட்டக் கணக்கை முடித்து கொள்ளலாம். ஆனால் குழந்தையின் பாதுகாவலர்கள் அல்லது குடும்பத்தினர் இந்த திட்ட கணக்கை தொடர விரும்பினால் தொடரலாம். அதன்பின் முதிர்வு காலத்தின் முடிவில் இதிலுள்ள சேமிப்பு பணம் குழந்தையிடம் ஒப்படைக்கப்படும். இதனை தொடர்ந்து இத்திட்டத்தில் கிடைக்கும் சேமிப்பு தொகைக்கு வரி விலக்கு உள்ளிட்ட சலுகையும் கிடைக்கிறது. அதனால் பெண் குழந்தைகளுக்கென்று சேமிக்க நினைக்கும் பெற்றோர்கள் இத்திட்டத்தில் இணைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!