பிரியப்போகும் வெற்றி & அபி, ரசிகர்கள் அதிர்ச்சி – “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

0
பிரியப்போகும் வெற்றி & அபி, ரசிகர்கள் அதிர்ச்சி -
பிரியப்போகும் வெற்றி & அபி, ரசிகர்கள் அதிர்ச்சி - "தென்றல் வந்து என்னை தொடும்" சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
பிரியப்போகும் வெற்றி & அபி, ரசிகர்கள் அதிர்ச்சி – “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் தற்போது விருப்பமான சீரியல்களில் ஒன்றான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அதிரடி திருப்பம் ஒன்று வர இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

தென்றல் வந்து என்னை தொடும்:

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அபியும் வெற்றியும் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டாலும், ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அபியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என பல வழிகளில் வெற்றி போராட ஆனால் அவர் போவதாக இல்லை. சென்ற வாரம் கூட அபி வீட்டை விட்டு வந்தால் தான் வெற்றியின் அண்ணன் ஜெயிலில் இருந்து வெளியே வருவார் என காட்டப்பட்டது. ஆனால் அப்போது வெற்றியால் அவருடைய அண்ணன் வெளியே வந்துவிடுகிறார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த வாரம் புதிய திருப்பம் வர போகிறது. அபி அப்பாவிற்கு பெரிய ஆபத்து ஒன்று வர இருக்கிறது. அவரை ரவுடிகள் கடத்தி செல்ல அவரை காப்பாற்ற வெற்றியின் உதவியை அபி கேட்கிறார். ஆனால் வெற்றி நீ இந்த வீட்டை விட்டு சென்றால் தான் உன் அப்பாவை காப்பாற்றி கூட்டி வருவேன் என சொல்கிறார். இந்த சந்தர்ப்பத்தை சுயநலமாக பயன்படுத்தி வெற்றி பேச, அபி அதற்கு சம்மதம் சொல்கிறார். வெற்றி உங்க அப்பாவை நான் காப்பாத்தி கூட்டிட்டு வரேன். ஆனால் நீ தாலியை கழட்டி வச்சுட்டு, உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என் வாழ்க்கை விட்டும் இந்த வீட்டை விட்டு போறேன்னு எழுதி கொடுக்கணும் என சொல்கிறார்.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இருந்து விலகிய பாலா – உண்மை நிலவரம் என்ன?

அதற்கு அபி ஓகே எழுதிக் கொடுக்கிறேன், உன்னை விட்டு போறேன்னு நான் மனப்பூர்வமாக எழுதிக் கொடுக்கிறன் என சொல்கிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் தான் அபியும் வெற்றியும் கோவிலுக்கு சென்று சந்தோசமாக இருந்தார்கள். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் கதை எப்படி கொண்டு செல்லப்படும் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!