பெல் (BEL) நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ஒரு வருகைக்கு ரூ.900/- ஊதியம்..!

0
பெல் (BEL) நிறுவன வேலைவாய்ப்பு 2022 -
பெல் (BEL) நிறுவன வேலைவாய்ப்பு 2022 -

பெல் (BEL) நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ஒரு வருகைக்கு ரூ.900/- ஊதியம்..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி Visiting Medical Officer மற்றும் Trainee Engineer பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகள் இப்பதின் வழியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Visiting Medical Officer, Trainee Engineer
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2022 & 22.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BEL காலிப்பணியிடங்கள்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் Visiting Medical Officer மற்றும் Trainee Engineer பணிக்கு மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

BEL கல்வித் தகுதி:
  • Trainee Engineer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் Civil Engineering / Electrical Engineering / Electrical & Electronics Engineering துறைகளில் B.E / B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Visiting Medical Officers பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் B.A.M S / B.H.M.S முடித்திருக்க வேண்டும்.

BEL முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவியினை பொருத்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதிவாய்ந்தவர்கள்.

BEL வயது வரம்பு:
  • Trainee Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Visiting Medical Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவில் பார்வையிடவும்.
BEL ஊதியம்:

Trainee Engineer பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியத்தொகை வழங்கப்படும்.
Visiting Medical Officers பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.900/- ஒரு வருகைக்கு ஊதியமாக அளிக்கப்படும்.

BEL விண்ணப்பிக் கட்டணம்:

Trainee Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.200/- வசூலிக்கப்படும்.

BEL தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BEL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம். மேலும் Trainee Engineer பணிக்கு 11.01.2022 அன்றைய தினம் மற்றும் Visiting Medical Officers பணிக்கு 22.01.2022 அன்றைய தினமும் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைந்து விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification PDF & Application Form I

Download Notification PDF & Application Form II

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!