பெல் நிறுவனத்தில் நிரந்தர பணிவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
பெல் நிறுவனத்தில் நிரந்தர பணிவாய்ப்பு - BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பெல் நிறுவனத்தில் நிரந்தர பணிவாய்ப்பு - BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பெல் நிறுவனத்தில் நிரந்தர பணிவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Project Engineer-I பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு BE / B.Tech முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (07.09.2022) விண்ணப்பித்து பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Project Engineer-I
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

BEL பணியிடங்கள்:

  • Project Engineer-I (Electronics) – 10 பணியிடங்கள்
  • Project Engineer-I (Mechanical) – 02 பணியிடங்கள்
Project Engineer-I கல்வி விவரம்:

Project Engineer-I பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics, Electronics & Communication, E&T, Communication, Telecommunication, Mechanical பாடப்பிரிவில் BE / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Project Engineer-I வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.08.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாராப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Project Engineer-I ஊதியம்:

Project Engineer-I பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

BEL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பரார்கள் ரூ.472/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

BEL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 07.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link     

Download Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!