BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஆரம்ப ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஆரம்ப ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஆரம்ப ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஆரம்ப ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனமானது தற்போது Project Engineer பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Project Engineer பணிக்கு என்று 10 காலிப்பணியிடங்கள் Electronics பிரிவில் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

BEL பணியிடம்:

Project Engineer பணிக்கு என Electronics பிரிவில் 10 பணியிடம் தற்போது பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BEL கல்வி விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Electronics / Electronics & Communication / E&T / Telecommunication பாடப்பிரிவில் B.E / B.Tech டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BEL வயது விவரங்கள்:

01.05.2022 அன்றைய நாளின் படி, Project Engineer பணிக்கு 32 வயது, அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

BEL முன் அனுபவம்:

01.05.2022 அன்றைய நாளின் படி, Project Engineer பணிக்கு குறைந்தது 2 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளது.

மேலும் Surveillance / Information Technology / Network Projects ஆகிய துறைகளில் விண்ணப்பதாரர்கள் அனுபவம் மற்றும் சான்றிதழ் வைத்திருக்கும் பட்சத்தில் கட்டாயம் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

BEL ஊதிய தொகை:

Project Engineer பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

BEL தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு (Written Test)
நேர்காணல் (Interview)

BEL விண்ணப்ப கட்டணம்:

PWD மற்றும் ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை தவிர, மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400/- விண்ணப்ப கட்டணமாகவும் மற்றும் அத்துடன் GST தொகையும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

BEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ விண்ணப்பத்தை பெற்று சரியாக பூர்த்தி செய்து அத்துடன் கேட்டுள்ள ஆவணங்களையும் இணைத்து 28.06.2022 ம் தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

BEL Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!