ரூ.1 லட்சம் ஊதியத்தில் BEL நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Medical Officer, Project Engineer ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 22 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Bharat Electronics Limited (BEL) |
பணியின் பெயர் | Project Engineer, Medical Officer |
பணியிடங்கள் | 22 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.06.2022 & 08.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online & Offline |
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள Medical Officer பணிக்கு என 01 பணியிடமும், Project Engineer-I பணிக்கு என 21 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Project Engineer, MO கல்வி தகுதி:
- Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Medical Council of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Medical Council of India அல்லது State Medical Council-லில் தங்களது Degree-யை பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
- Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ECE, Electronics & Telecommunication, Electrical & Electronics, Computer Science, Information Technology, Science ஆகிய பாடப்பிரிவில் B.E / B.Tech Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Project Engineer, MO வயது வரம்பு:
- Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்புஆனது 20.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 20.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 32 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
Project Engineer, MO சம்பளம்:
- Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
- Project Engineer-I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
BEL தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
BEL விண்ணப்ப கட்டணம்:
- Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PWBD / ESM பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.472/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PWBD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
BEL விண்ணப்பிக்கும் விதம்:
- Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (08.07.2022) தபால் செய்ய வேண்டும்.
- Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (29.06.2022) சமர்ப்பிக்க வேண்டும்.