பெல் நிறுவனத்தில் ரூ.79,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Havildar Security WG-III/ CP-III பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிங்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) அறிவித்த அறிவிப்பில் Havildar Security WG-III/ CP-III பணிக்கு என 2 இடங்களை காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில்/ கல்வி நிலையங்களில் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
- Havildar Security WG-III/ CP-III பணிக்கு பணி சார்ந்த பிரிவுகளில் 15 வருடம் ராணுவ துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.04.2022 நாள் கணக்கின்படி அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.
- Havildar Security பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர் WG-III/ CP-III படி குறைந்தபட்சம் ரூ.20,500/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் Document Verification, Physical Endurance Test மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
- OBC, SC பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.250/- விண்ணப்ப கட்டணத்துடன் 18% GST-யும் சேர்த்து செலுத்த வேண்டும். மற்ற பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணபதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.