ITI, Diploma படித்தவரா? BEL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!

0
ITI, Diploma படித்தவரா? BEL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!
ITI, Diploma படித்தவரா? BEL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!
ITI, Diploma படித்தவரா? BEL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது (BEL) சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Engineering Assistant Trainee (EAT) & Technician ‘C’ பதவிக்கு என மொத்தமாக 91 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் வேலைவாய்ப்பு விவரங்கள்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Engineering Assistant Trainee (EAT) பணிக்கு 66 பணியிடம் மற்றும் Technician ‘C’ பணிக்கு 25 பணியிடம் என மொத்தமாக 91 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக வெளியான அறிவிப்பில் தெரிவித்துள்ளது. Engineering Assistant Trainee (EAT) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics & Communication / Mechanical / Electrical / Electrical & Electronics Engineering பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும். Technician ‘C’ பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronic Mechanic / Fitter / Electrical / Miller / Machinist / Electro Plater பாடப்பிரிவில் 10 ம் வகுப்பிற்கு பிறகு ITI முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் இத்துடன் 1 வருடம் apprenticeship முடித்திருக்க வேண்டும். அல்லது 10ம் வகுப்பிற்கு பிறகு 3 வருட National Apprenticeship Certificate Course முடித்திருக்க வேண்டும். 01.03.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC 3 ஆண்டு, SC / ST 5 ஆண்டு மற்றும் PWD 10 ஆண்டுகள் என பிரிவிற்கு ஏற்றாற்போல் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அனுபவம் வைத்திருக்க தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், முன் அனுபவம் இல்லாத நபர்கள் உடனே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் Engineering Assistant Trainee (EAT) பணிக்கு ரூ.6.77லட்சம் மற்றும் Technician ‘C’ பணிக்கு ரூ.5.94லட்சம் என ஆண்டு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். GEN / OBC / EWS வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250+18% GST செலுத்த வேண்டும். மேலும் SC / ST / PWD / Ex-servicemen வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை உடனே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் (30.04.2022) நாளையுடன் நிறைவு பெறுகிறது. எனவே உடனே தங்களின் பதிவுகளை செய்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

BEL Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!