மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 – ஹோலி பண்டிகைக்கு முன் வழங்கல்? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 - ஹோலி பண்டிகைக்கு முன் வழங்கல்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 - ஹோலி பண்டிகைக்கு முன் வழங்கல்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 – ஹோலி பண்டிகைக்கு முன் வழங்கல்? முழு விவரம் இதோ!

வரவிருக்கும் திருவிழாக் காலங்களில் மத்திய அரசு பணியாளர்களின் செலவினங்களை குறைக்கும் விதமாக அரசாங்கம் வட்டியில்லா முன்பணமாக ரூ.10,000 அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

முன்பணம் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொருளாதாரத்தில் நுகர்வோர் செலவினங்களை அதிகரிக்கவும், தற்போதைய கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் மந்தநிலையை எதிர்த்துப் போராடவும் அரசாங்கம் ஒரு சிறப்பு தொகை திட்டத்தை அறிவிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன், முன்பணமாக ரூ.10,000 ரூபாய் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.25) வரை விடுமுறை – அரசு அதிரடி முடிவு!

இந்த தொகைக்கு மத்திய அரசு ஊழியர்கள் எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை. அந்த வகையில் இந்த வட்டியில்லா முன்பணத் தொகை, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை அரசு ஊழியர்கள் செலவழிக்க அனுமதிக்கும். இது வணிகத்தை மேம்படுத்துவதோடு பொருளாதாரத்தின் மந்தநிலையையும் முறியடிக்கும் என்று தெரிகிறது. இதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கான இத்திட்டம், கடந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டது. எனவே, மீண்டும் அதே திட்டத்தை மார்ச் மாதத்தில் அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 25 முதல் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!

இப்போது திருவிழாக்களுக்கு வழங்கப்படும் இந்த முன்பணம் முன்கூட்டியே ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை எடுத்து உபயோகித்தவுடன் மீண்டும் மத்திய அரசு பணியாளர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து 10 தவணைகளில் ரூ.10,000 திருப்பி அளிக்கும் வசதியை அரசு வழங்கி வருகிறது. இல்லையென்றால் ரூ.1,000 என்ற வகையில் இத்தொகையை மாதாந்திர தவணைகளில் செலுத்தலாம். இது குறித்து அறிந்த வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின் படி, சிறப்பு விழா திட்டத்தின் கீழ் சுமார் 4,000 முதல் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

அப்படி அறிவிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு பணம் ஏற்றப்பட்ட ரூ.10,000 ரூபே கார்டு முன்கூட்டியே வழங்கப்படும். இப்போது மத்திய அரசு ஊழியர்கள் திருவிழாக்களுக்கான முன்பணத்தை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலவிட முடியும். இந்த அட்டைக்கான வங்கிக் கட்டணத்தை அரசே ஏற்கும். இப்போது இந்த சிறப்பு விழா அட்வான்ஸ் திட்டத்தின் மூலம், பண்டிகைகளின் போது அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை உறுதி செய்வதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது. இது வரி வருவாயை விளைவிக்கும் மற்றும் நேர்மையான வணிகங்களை ஊக்குவிக்கும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here