தமிழக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு ஹாப்பி நியூஸ் – தனி படுக்கை வசதி!

0
தமிழக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு ஹாப்பி நியூஸ் - தனி படுக்கை வசதி!
தமிழக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு ஹாப்பி நியூஸ் - தனி படுக்கை வசதி!
தமிழக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு ஹாப்பி நியூஸ் – தனி படுக்கை வசதி!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு தனியாக படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பெண்கள் முன்பதிவு செய்யும்போதே அவர்களுக்கான படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும்.

தனி படுக்கை வசதி:

தமிழக அரசு பெண்களுக்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் கூட சட்டமன்றத் தேர்தலின் போது பெண்கள் அரசு பேரூந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த உடனேயே அந்த திட்டத்தை செயல்படுத்திவிட்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவருமே இந்த திட்டத்தால் மிகப் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர்.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண்கள் குறித்த தகவல்!

இதுமட்டுமல்லாமல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டமும் விரைவில் அறிமுகமாகவுள்ளது. மேலும், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. ஏற்கனவே தமிழக அரசு பெண்களுக்கு செய்யும் நலத் திட்டங்களே மிக பெரிய அளவில் உதவிகரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு தனியாக படுக்கைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், குளிர் வசதியுள்ள பேருந்து அல்லது குளிர் வசதியில்லாத பேருந்துகளில் தனியாக படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் போதே பெண்களுக்கான படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடும். பெண்கள் முன்பதிவு செய்தது போக மீதம் படுக்கைகள் இருப்பின் அந்த படுக்கைகள் மற்ற பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here