BECIL நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.44,900/- வரை ஊதியம்..!

0
BECIL நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் - ரூ.44,900/- வரை ஊதியம்..!
BECIL நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் - ரூ.44,900/- வரை ஊதியம்..!
BECIL நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.44,900/- வரை ஊதியம்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Lower Division Clerk, Librarian, Programmer, Store Keeper, Stenographer, MSSO போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 123 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (28.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் LDC, Librarian, Programmer and Other
பணியிடங்கள் 123
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BECIL காலிப்பணியிடங்கள்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) Lower Division Clerk, Librarian, Programmer, Store Keeper, Stenographer, MSSO போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 123 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

BECIL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, B.E, B.Tech, Bachelor’s Degree, Post Graduate Degree, Master Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும். கல்வி பற்றிய விரிவான தகவலை அறிவிப்பில் காணலாம்.

BECIL முன்னனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற அல்லது தனியார் நிறுவனங்களில் குறைந்தது 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இதை பற்றிய விரிவான தகவலை அறிவிப்பில் காணலாம்.

BECIL ஊதியம்:
  • Mortuary Attendant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.13,290/- என்றும்,
  • Lower Division Clerk, Stenographer, Junior Warden பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.18,750/- என்றும்,
  • Junior Hindi Translator, MRT, Dental Technician, Pharmacist பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.22,020/- என்றும்,

  • Programmer, Yoga Instructor பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.44,900/- என்றும்,

மற்ற அனைத்து பணிகளுக்கும் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,400/- என்றும் மாத ஊதியமாக பெறுவார்கள்.

BECIL தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Test, Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.750/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

SC / ST / EWS / PH பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் ரூ.450/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

BECIL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 28.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!