Data Entry Operator வேலை தயார் – 85+ காலிப்பணியிடம் – விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்..!

0

Data Entry Operator வேலை தயார் – 85+ காலிப்பணியிடம் – விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) கடந்த சில நாட்களுக்கு முன் Data Entry Operator (DEO) பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. DEO பணிக்கு என மொத்தமாக 86 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு (மே 22) முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, BECIL நிறுவனத்தில் Data Entry Operator (DEO) பதவிக்கு என்று மொத்தமாக 86 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. DEO பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். இத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு MS-Word, PowerPoint and Excel ஆகியவை தெரிந்தவராக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அவசியம் ஆங்கிலத்தில் 35 வார்த்தை ஒரு நிமிடத்திற்கும் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தை ஒரு நிமிடத்திற்கும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். DEO பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாதம் ஊதிய தொகையாக ரூ.21,184/- அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Typing Test மற்றும் Computer Based Test அல்லது Written Test (Objective & Descriptive) ஆகிய தேர்வு முறைகள் மூலம் இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

இந்த மத்திய நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 22.05.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால் உடனே விண்ணப்பிக்கவும்.

BECIL Job Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!