பொறியியல் பட்டதாரிர்களுக்கான BECIL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Mobile Application Developer & PHP Developer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், App டெவலப்பர் எனும் Mobile Application Developer மற்றும் PHP Developer பணிக்கு என்று தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Mobile Application Developer மற்றும் PHP Developer பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science / IT பாடப்பிரிவில் B.E / B. Tech / M.Sc போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Mobile Application Developer மற்றும் PHP Developer பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
- Mobile Application Developer மற்றும் PHP Developer பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்ட பின் மாதம் ரூ.68,000/- ஊதிய தொகையாக பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.
- Mobile Application Developer மற்றும் PHP Developer பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.