விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகுவதில் சிக்கல் – தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகுவதில் சிக்கல் - தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகுவதில் சிக்கல் - தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகுவதில் சிக்கல் – தளபதி ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் இளையதளபதி விஜய் படம் என்றாலே குடும்ப ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படம் வெளியாவதில் சர்ச்சை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பீஸ்ட் படம் சர்ச்சை:

தமிழ் மக்களால் இளையதளபதி என அன்பாக அழைக்கப்படுவர் நடிகர் விஜய். அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவரது படத்திற்கு ரசிகர்களாக இருக்கின்றனர். விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் லீட் ரோலில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சாதனை படைத்து இருக்கிறது.

எனது மகன் அர்ஷ் அப்படியே என்னை போலவே இருக்கிறான் – ஆலியா ஓபன் டாக்!

மேலும் வருகிற தமிழ் புத்தாண்டு அன்று இந்த படம் வெளியாக இருக்கிறது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் விஜய்க்கு நல்ல பெயர் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. விஜய் ரசிகர்கள் பலர் பீஸ்ட் படம் குறித்து ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். கடந்த முறை வெளியான மாஸ்டர் படம் கொரோனா அச்சம் காரணமாக நீண்ட நாள் தியேட்டரில் ஓடவில்லை. அதனால் பீஸ்ட் படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் படம் என்றாலே அது வெளியாக எதாவது சர்ச்சை ஒன்று இருக்கும், அந்த வகையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் காவி ஸ்கிரீனை விஜய் கிழித்தார் என சர்ச்சை கிளம்பியது. அதனால் படம் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் வருத்தமாக இருந்தாலும் அதை எல்லாம் மீறி பீஸ்ட் படம் வெளியாகும் எனவும், கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!