பீஸ்ட் படத்தில் விஜயுடன் இணையும் தனுஷ்? வெளியான தகவல்!

0
பீஸ்ட் படத்தில் விஜயுடன் இணையும் தனுஷ்? வெளியான தகவல்!
பீஸ்ட் படத்தில் விஜயுடன் இணையும் தனுஷ்? வெளியான தகவல்!
பீஸ்ட் படத்தில் விஜயுடன் இணையும் தனுஷ்? வெளியான தகவல்!

முன்னணி நடிகரான விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

“பீஸ்ட்” திரைப்படம்

தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜயின் திரைப்படங்களுக்கு எப்பொழுதும் ஆரவாரம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் ஆனது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை உருவாகியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெறும் ‘பீஸ்ட்’ திரைப்பட ஷூட்டிங்கில் சமீபத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடனமாடும் பாடல் படமாக்கி முடிக்கப்பட்ட நிலையில் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகிறது.

ஆகஸ்ட் 14 முதல் வார இறுதி ஊரடங்கில் தளர்வுகள் – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!

பீஸ்ட் திரைப்படம் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். தற்போது தனுஷ் அவர்கள் பீஸ்ட் படக்குழுவுடன் இணைவதாக கூறப்படுகிறது. தனுஷ் இந்தப் படத்தில் பாடல் எழுதி, பாடுகிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் படக்குழுவின் சார்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்புகள் சமூக வலைதளங்களில் அந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். ஆனால் இது குறித்து எந்தவித அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் வெற்றி இயக்குனர் இந்த திரைப்படத்தை இயக்கி வருவதனால் கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய இரு படங்களிலும் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதி பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படக்குழுவுடன் தனுஷ் இணைந்துள்ளார் என்ற செய்தி ஒரு கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு க்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!