ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறும் எளிய வழிமுறைகள் – தவறாமல் படிங்க!!

2
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறும் எளிய வழிமுறைகள் - தவறாமல் படிங்க!!
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறும் எளிய வழிமுறைகள் - தவறாமல் படிங்க!!
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறும் எளிய வழிமுறைகள் – தவறாமல் படிங்க!!

தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான வழிமுறைகள் இப்பதிவில் வழங்கப்பட்டு உள்ளது.

ரேஷன் கார்டு:

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இதனை மக்கள் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே பெற முடியும். ரேஷன் கார்டுகளில் மொத்தம் ஐந்து வகைகள் உள்ளன. வகைகளுக்கு ஏற்ப அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்களும் மாறுபடும். இந்நிலையில் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு எவ்வாறு பெறுவது என்பதற்கான எளிய வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் DA உயர்வு – நவோதயா வித்யாலயா!

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறும் வழிமுறைகள்:

 • பயனர்கள் அதிகாரபூர்வ தளமான https://tnpds.gov.in/ என்ற இணையத்தலின் லாக் இந்த செய்து, அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
 • அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்து, அடுத்ததாக வரும் Name of Family Head என்ற பாக்சின் கீழ் ஆங்கிலம் மற்றும் தமிழில் குடும்ப தலைவர் / தலைவி பெயரை சரியாக பதிவிட வேண்டும்.
 • அதன் பிறகு மற்ற விவரங்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி என பலவற்றை கொடுக்க வேண்டும்.
 • பின்பு அப்ளிகேஷனில் குடும்ப தலைவருக்கான புகைப்படம் என்ற இடத்தில் அவர்களது புகைப்படத்தை (5Mb அளவில்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 • இதை அடுத்து அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன வகை அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 • பின்பு உறுப்பினர் சேர்க்கை என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஜூன் 20 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

 • இதை தொடர்ந்து உறுப்பினர்களின் ஆதார் கார்டினை ஸ்கேன் செய்து அதை பதிவிறக்கம் செய்து உறுப்பினர் சேர்க்கை சேமி என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
 • அதில் குடும்ப விவரங்களை முழுமையாக பதிவிட்டு, ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 வயதுக்குட்பட்ட குழந்தை எனில் பிறப்பு சான்று கொடுத்தால் போதுமானது. அதனை பதிவேற்றம் செய்து உறுப்பினர் சேமி என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
 • பின்பு பதிவு செய்த விவரங்கள் சரியானதா என்பதை பார்த்து பதிவு செய் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்த விவரத்தில் ஏதேனும் தவறு இருந்தால் அது சிகப்பு கலரில் திரையாகும். பின்பு அதை சரி செய்து விவரங்கள் சரியவனை எனில் உறுதி செய் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
 • பின்பு மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என்று வரும். அதில் ஓர் குறிப்பு எண் வரும். அதை வைத்துக்கொண்டு கார்டின் நிலையை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
 • இதை தொடர்ந்து உங்கள் ஆதார் கார்டு, போட்டு, அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான் உங்கள் அப்ளிகேஷன் விரைவில் பரிசீலிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

 1. திருப்போரூர் அலுவலகத்தில் on-line மூலமாக பதிவு செய்த விண்ணப்பம் கடந்த 4 மாதமாக உரிய அலுவலர் அங்கீகாரம் தராமல் வைத்து இருக்கிறார்.

 2. They asking directly amount rs 500 . Otherwise will not messages to your mobile. My experience in villupuram taluk office

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!