தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு – செப்.10ம் தேதி முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - செப்.10ம் தேதி முதல் தொடக்கம்!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - செப்.10ம் தேதி முதல் தொடக்கம்!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு – செப்.10ம் தேதி முதல் தொடக்கம்!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. அதனால் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் குறித்த அறிவிப்பை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.

கலந்தாய்வு தேதிகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டது. அதன்படி ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 16ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

TNPSC குரூப் 5A தேர்வு குறித்த முழு விவரம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும் இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் நீட் தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. அதனால் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன் பொது கலந்தாய்வு 10ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை என 4 கட்டங்களாக நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதில் 2ம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 25ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். இதே போல் 3ம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13 முதல் 15 வரை தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இதையடுத்து 4ம் கட்டமாக வருகிற அக்டோபர் 30ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு, பொதுப்பிரிவு ஆகிய இரு பிரிவில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். இதனால் அரசு பள்ளி மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். அத்துடன் இந்த 7.5% உள் ஒதுக்கீடு 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!