ஆதாரில் இந்த தகவலை “ஒரு” முறை மட்டுமே புதுப்பிக்க முடியும் – இதை தெரிஞ்சுக்காம இருக்காதீங்க!

0
ஆதாரில் இந்த தகவலை
ஆதாரில் இந்த தகவலை "ஒரு" முறை மட்டுமே புதுப்பிக்க முடியும் - இதை தெரிஞ்சுக்காம இருக்காதீங்க!
ஆதாரில் இந்த தகவலை “ஒரு” முறை மட்டுமே புதுப்பிக்க முடியும் – இதை தெரிஞ்சுக்காம இருக்காதீங்க!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமானதாகும். அதனால் இதிலுள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். ஏதேனும் தவறான விவரங்கள் இருப்பின் இந்த தகவல்களை ஒரு முறை மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும் இதனை பற்றி கூடுதல் விவரத்தை பார்ப்போம்.

ஆதார் கார்டு

இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக உள்ளது. இதையடுத்து அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். அதன்படி ஆதரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்டவை சரியானதாக இருக்க வேண்டும். மேலும் மற்ற ஆவணங்களில் உள்ள தரவுகளும் ஆதாரில் உள்ள விவரங்களும் மாற்றமின்றி இருக்க வேண்டும்.

இப்பொது எந்தெந்த தகவல்களை எத்தனை முறை திருத்திக்கொள்ளலாம் என்றும் திருத்துவதற்கான வழிகளை குறித்தும் பார்ப்போம்.

மொபைல் எண்

  • உங்களின் மொபைல் எண்ணை புதுப்பிக்க ஆதார் சேவா கேந்திரா (ASK) அல்லது ஆதார் பதிவு புதுப்பிப்பு மையத்திற்குச் சென்று ஒரு முறை மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
  • மேலும் மொபைல் எண்ணை ஆன்லைன் முறையில் புதுப்பிக்க இயலாது.

பெயர்

  • ஆதாரில் உங்களின் பெயர் மற்ற ஆவணங்களின் பெயருடன் வேறுபடுகிறது எனில் இதனை கட்டாயமாக திருத்த வேண்டும்.
  • மேலும் உங்களின் பெயரை 2 முறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.
Exams Daily Mobile App Download

பிறந்த தேதி

  • உங்கள் ஆதாரில் பிறந்த தேதியை (DOB) ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க இயலும்.
  • உங்களின் பெயரை 2வது முறை புதுப்பிக்க வேண்டுமெனில் ஒப்புதலுக்காக UIDAI இன் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்தை அணுக வேண்டும்.

பாலினம்

  • ஆதாரில் உங்களின் பாலினத்தையும் ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.
  • மேலும் இரண்டாவது முறை உங்களின் பாலினத்தை புதுப்பிக்க நினைத்தால் ஆதார் மையத்தில் கோரிக்கையைப் புதுப்பித்து, விதிவிலக்கின் கீழ் UIDAI இன் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்திற்கு சென்று புதுப்பிக்க ஒப்புதல் பெற வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!