தமிழகத்தில் B.E., B.Tech., கலந்தாய்வு தேதிகள் மாற்றம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
தமிழகத்தில் B.E., B.Tech., கலந்தாய்வு தேதிகள் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் B.E., B.Tech., கலந்தாய்வு தேதிகள் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் B.E., B.Tech., கலந்தாய்வு தேதிகள் மாற்றம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்து இருந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாணவர் சேர்க்கை:

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் முறையில் பாடங்கள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர். கலை, அறிவியல் மற்றும் பொறியியல் என மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர். கொரோனா காலம் என்பதால் ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8 சரிவு – இன்றைய நிலவரம்!

அண்ணா பல்கலைக்கழகம் உள்பட மாநிலம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூலை 26ம் தேதி தொடங்கி முடிவடைந்தத நிலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை பிளஸ் 2 ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டதால் அதிக அளவில் ஆன மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் செப்டம்பர் 7 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது கலந்தாய்வு நடைபெறும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 14-ல் Rank List வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 17 முதல் 24 வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது. செப்.27ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறும். அதன் பின் அக்டோபர் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறும். பின் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் SCA, SC கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here