அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு !!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு !!
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு !!

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு !!

தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் பாட வகுப்புகள் ஆனது வரும் நவம்பர் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் அதற்கான செமஸ்டர் தேர்வு தேதிகளையும் தற்போது அண்ணா பல்கலை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இது குறித்த தகவல்களை கீழே உள்ள தகவல்களின்படி அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

பொறியியல் வகுப்புகள் !

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டு அனைத்து துறைகளும் முடங்கி விட்டன. இதில் கல்வித்துறை ஆனது பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து பணிகளும் தாமதமாகவே நடைபெற்றது. அதிலும் பொறியியல் மாணவர் சேர்க்கை மேலும் தாமதப்படுத்தப்பட்டு நடைபெற்றது.

இருப்பினும் தமிழகத்தில் உள்ள 461 கல்லூரிகளில் 1,63,514 காலியிடங்கள் இருந்தும், அதில் 71,195 காலியிடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. மீதமுள்ள இடங்கள் இன்னும் நிரம்பாமல் இருப்பதனால் அதனை நிரப்ப துணை கலந்தாய்வினை மேற்கொள்ள உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

வகுப்புகள் தொடக்கம் !

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வரும் நவம்பர் 23ம் தேதி முதல் முதலாமாண்டு பொறியியல் பாட வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. மேலும் இப்பருவ வகுப்புகள் பிப்ரவரி 24ம் தேதி அன்று முடிவடையும் என்றும் அதற்கான முன் பயிற்சி வகுப்புகள் நவம்பர் 09ம் தேதி முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 26ம் தேதி அன்றும் மார்ச் 08ம் தேதி முதல் பருவத்தேர்வுகளும் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு கால அட்டவணை ஆனது வகுப்புகள் தொடங்கப்பட்டவுடன் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here