IPL அப்டேட்: பிப். 12 இல் தொடங்கும் மெகா ஏலம் – BCCI வெளியிட்ட விதிமுறைகள்!

0
IPL அப்டேட்: பிப். 12 இல் தொடங்கும் மெகா ஏலம் - BCCI வெளியிட்ட விதிமுறைகள்!
IPL அப்டேட்: பிப். 12 இல் தொடங்கும் மெகா ஏலம் - BCCI வெளியிட்ட விதிமுறைகள்!
IPL அப்டேட்: பிப். 12 இல் தொடங்கும் மெகா ஏலம் – BCCI வெளியிட்ட விதிமுறைகள்!

2022 ஆண்டுக்கான IPL மெகா ஏலம் இம்மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏலத்தில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும் பின்பற்ற வேண்டிய சில கட்டாய விதிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

BCCI விதிமுறைகள்:

கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு IPL போட்டிகள் துபாயில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான IPL அணிகளின் ஏலமும் துபையில் நடந்தது. தற்போது துபாயில் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 2022 ஆம் ஆண்டுக்கான IPL தொடரை துபாயில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் தென்னாப்பிரிக்காவில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆலோசனை நடத்திய நிலையில் இந்த ஆண்டு IPL தொடர் இந்தியாவிலையே நடத்த இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு IPL மெகா ஏலம் இம்மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

Cognizant நிறுவனத்தில் 41,000 பேருக்கு வேலைவாய்ப்பு – அதிகாரபூர்வ அறிக்கை!

தற்போது ஏலத்தில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும் பின்பற்ற வேண்டிய சில கட்டாய விதிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் முதலாக ஐபிஎல் 2022 ஏலம் ஒரு பயோ-பப்பில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஏலத்தில் பங்கேற்கும் உரிமையாளர்கள் கோவிட்-19 பரிசோதனையான RT-PCR யின் தேர்ச்சி சான்றிதழை கொண்டு வர வேண்டும். இதனை தொடர்ந்து மெகா ஏலத்திலும் BCCI தலைமையில் மருத்துவ நிறுவனத்தால் சோதனை நடத்தப்படும் என்றும் ஏலத்தில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

IPL 2022: தோனி கேப்டன்ஷிப்பின் கீழ் விளையாடுவதே எனது கனவு – சேத்தன் சகாரியா பேட்டி!

ஐபிஎல் 2022 பர்ஸ் ரூ.80 கோடியில் இருந்து ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக உள்நாட்டு வட்டாரத்தைச் சேர்ந்த அதிக வீரர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பிய பங்கேற்பாளர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் பங்கேற்பாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி டோஸ் 1 மட்டும் செலுத்தி டோஸ் 2 செலுத்தாமல் இருந்தால் அதன் முழு விவரங்களையும் பிசிசிஐ மருத்துவக் குழுவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!