இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? BCCI தீவிர ஆலோசனை! விரைவில் அறிவிப்பு!

0
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? BCCI தீவிர ஆலோசனை! விரைவில் அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? BCCI தீவிர ஆலோசனை! விரைவில் அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? BCCI தீவிர ஆலோசனை! விரைவில் அறிவிப்பு!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோஹ்லி விலகியதை அடுத்து தற்போது அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியமான (பி.சி.சி.ஐ) அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

பி.சி.சி.ஐ ஆலோசனை:

ஜனவரி 16 ஆம் தேதி நேற்று இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகி உள்ளார். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. இம்முறை இந்தியா தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏமாற்றமாக அமைந்தது. இதனை தொடர்ந்து நேற்று டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோஹ்லி விலகுவதாக அறிவித்தார். இதனால் விராட் கோஹ்லி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மார்ச் மாதம் முதல் பள்ளிகள் & பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

விராட் கோஹ்லி விலகியதை தொடர்ந்து தற்போது அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டனுக்கான பட்டியலில் 4 வீரர்கள் உள்ளன. ரோஹித் சர்மா, KL ராகுல், பும்ரா, அஸ்வின் ஆகிய 4 வீரர்களில் ஒருவர் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் மற்றும் 20 ஓவர் T20 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? தேர்வின்றி தேர்ச்சி? அரசுக்கு முக்கிய கோரிக்கை!

ரோகித் சர்மா டெஸ்டிலும் கடந்த ஆண்டு இந்தியாவுக்காக அதிக ரன்களை அடித்துள்ளார். மேலும் கேப்டனாக தனது திறமையை நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் நிரூபித்தார். இதனால் அவர் கேப்டனாக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனான KL ராகுலுக்கும் வாய்ப்பு உள்ளது. டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இன்றுவரை சிறந்த பௌலராக திகழும் தமிழ்நாடு வீரர் அஸ்வின் அணியை வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறுகிய காலத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் கேப்டன் பொறுப்பை கொடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here