U19 கிரிக்கெட் உலகக்கோப்பை: இந்திய அணியில் புதிய வீரர் சேர்ப்பு! BCCI அறிவிப்பு!

0
U19 கிரிக்கெட் உலகக்கோப்பை: இந்திய அணியில் புதிய வீரர் சேர்ப்பு! BCCI அறிவிப்பு!
U19 கிரிக்கெட் உலகக்கோப்பை: இந்திய அணியில் புதிய வீரர் சேர்ப்பு! BCCI அறிவிப்பு!
U19 கிரிக்கெட் உலகக்கோப்பை: இந்திய அணியில் புதிய வீரர் சேர்ப்பு! BCCI அறிவிப்பு!

2022 ஆண்டுக்கான U-19 ஜூனியர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் வாசு வாட்ஸ்க்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, இந்திய பிளேயிங் 16 யில் ஆராத்யா யாதவ் சேர்க்கப்பட்டார். இதை தொடர்ந்து அடுத்து இன்று நடைபெறும் பங்களாதேஷ்க்கு எதிரான காலிறுதி போட்டியில் ஆராத்யா யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BCCI அறிவிப்பு:

ஜனவரி 14ஆம் தேதி 2022 ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 16 அணிகளையும் 4 பகுதிகளாக குரூப் A, B,C,D என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரூப்பில் 4 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகிறது. இத்தொடரில் ஒவ்வொரு அணிக்கும் 3 போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் டேபிள் டாப்பில் உள்ள 4 அணிகளுக்கு காலிறுதி, மற்றும் அரையிறுதி போட்டிகள் நடத்தப்படும். அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற 2 அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறுவர்.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – UMANG செயலி மூலம் கொரோனா முன்பணம் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

ஜனவரி 19 ஆம் தேதி அயர்லாந்து எட்டிஹிரான போட்டிக்கு முன்பு இந்திய U-19 கேப்டன் யாஷ் துல் உட்பட மேலும் 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து மீதம் உள்ள வீரர்களை வைத்து இந்திய அணி விளையாடி வந்தது. இதற்கு முன் ஜனவரி 22 ஆம் நடைபெற்ற உகண்டாக்கு எதிரே போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் வாசு வாட்ஸ்க்கு காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வாசு வாட்ஸ் அடுத்து நடக்கும் எந்த போட்டியிலும் விளையாட முடியாது என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏடிஎம் கார்டு வேலை செய்யாது!

இதனால் வாசு வாட்ஸ்க்கு பதிலாக இந்திய அணியில் புதிதாக ஆராத்யா யாதவ் சேர்க்கப்பட்டாக BCCI அறிவித்தது. இதையடுத்து நேற்று நடைபெறும் பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் ஆராத்யா யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை முதல் காலிறுதி போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன. இன்று நடைபெறும் போட்டியில் கொரோனா தொற்றால் அணியில் இருந்து வெளியேறிய இந்திய கேப்டன் யாஷ் மீண்டும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!