விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பிக் பாஸ்’ ராஜு – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'பிக் பாஸ்' ராஜு - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பிக் பாஸ்’ ராஜு – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி திருந்தியது போல காட்டப்பட்ட நிலையில் பாரதி மீண்டும் மாறாமல் கண்ணம்மா மீது சந்தேகத்துடன் இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் வருண் வந்து உண்மையை சொல்ல இருப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா ப்ரோமோ:

பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்தாலும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ தொடங்கியது போல சில எபிசோடுகளில் காட்டப்பட்டாலும் தற்போது மீண்டும் பாரதி பழையபடி மாறி இருக்கிறார். அவர் கண்ணம்மாவை சந்தேகப்பட்டு வருகிறார். கண்ணம்மா தவறு செய்ததை ஒப்புக் கொண்டால் சேர்ந்து வாழ்வதாக சொல்ல கண்ணம்மா எதுவும் பேசாமல் சென்றுவிடுகிறார்.

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!

மறுபக்கம் வெண்பா பல தில்லாங்கடி வேலைகளை பார்த்து பாரதியுடன் மீண்டும் சேர்ந்துவிடுகிறார். அதனால் கதை மீண்டும் சூடுபிடிக்க இருக்கிறது. கண்ணம்மா பாரதியின் பொருள்களை கொடுக்க வந்து கொடுத்துவிட்டு இந்த உலகத்திற்கு நீ தான் லக்ஷ்மியின் அப்பா என நிரூபிப்பேன் இது என்னுடைய சபதம் என சொல்லி கிளம்புகிறார். அதனால் மீண்டும் அதை கதை தான் வர போகிறது. கடைசி வரை DNA டெஸ்ட் எடுக்க போவதில்லை என உறுதியாக தெரிகிறது.

“அம்மாவையும் என்னையும் ரொம்ப அசிங்கமா திட்டுறாங்க” விஜே அர்ச்சனா மகள் ஆதங்கம் – வைரலாகும் பதிவு!

பாரதி கண்ணம்மா மீது தவறு இல்லை என நிரூபிக்க அந்த வருண் வந்தால் மட்டுமே முடியும் என்பதால் இனி வரும் எபிசோடுகளில் வருண் என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருண் வந்து கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என உண்மையை சொல்ல பாரதி அதை நம்புவரா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் என்ட்ரி குறித்த எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here