அமீருடன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆட பயப்படும் பாவ்னி – ரசிகர்கள் ஷாக்!

0
அமீருடன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆட பயப்படும் பாவ்னி
அமீருடன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆட பயப்படும் பாவ்னி

அமீருடன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆட பயப்படும் பாவ்னி – ரசிகர்கள் ஷாக்!

பாவ்னி தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீருடன் சேர்ந்து ஆடி கொண்டிருக்கிறார். அமீருக்கு ஈடுகட்டி ஆட மிகவும் நடுக்கமாக இருக்கும் என பாவ்னி சமூக வலைதள பக்கங்களில் கூறிய பதிவு வைரலாகி வருகிறது.

அமீர் & பாவ்னி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சின்னத்தம்பி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலாமானவர் தான் பாவனி. இவருக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதே சீசன் 5 நிகழ்ச்சியில் தான் அமீரையும் பாவனி சந்தித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியுடன் மட்டுமே அமீர் முழுக்க முழுக்க நேரத்தை செலவிட்டு வந்தார். இருவரும் காதலித்து கொண்டிருக்கிறார்களோ என பல வதந்திகள் பரவி கொண்டிருந்தது. இதற்கு நடுவே பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த விவகாரம் மேலும் வதந்தியை கிளப்பியது.

பாவனியும், அமீரும் இந்த வதந்திக்கு எந்தவித பதிலும் தெரிவிக்காத காரணத்தினால் வதந்திகள் பரவியபடி தான் சென்று கொண்டிருந்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு பாவனியும் அமீரும் வெளியேறிய பிறகும் கூட அவ்வப்போது ஒன்றாகவே வெளியூருக்கு சுற்றி கொண்டிருந்தனர். பின்னர் இருவரிடமும் நீங்கள் காதலிக்கிறீர்களா என கேட்கப்பட்டது. ஆனால் இருவரும் சிறந்த நண்பர்கள் மட்டுமே என கூறி அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். பின்பு தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

அமீருக்கு இணையாக பாவனியும் ஆடி அனைவரையும் வியக்க வைத்து வருகிறார். இந்நிலையில், பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி கேட்டு அதற்குரிய பதிலை தெரிவிக்கும் படியான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அமீருடன் டான்ஸ் ஆடுவது உங்களுக்கு எப்படி இருக்கிறது என ரசிகர் ஒருவர் கேட்டதிற்கு மிகவும் நடுக்கமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி பற்றி கூறுங்கள் என கேட்டதற்கு வாழ்க்கையிலேயே இப்படி ஒரு பயத்தை சந்தித்ததே இல்லை என கூறியுள்ளார். நான் இதுவரை இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கிடையாது. இதனால், மிகவும் பயத்துடன் தான் ஆடி கொண்டிருக்கிறேன் என கூறும்படியான பதிவு வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here