மீண்டும் ஜோடி சேர்ந்த ‘பிக் பாஸ்’ அமீர், பாவ்னி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் ஜோடி சேர்ந்த 'பிக் பாஸ்' அமீர், பாவ்னி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் ஜோடி சேர்ந்த 'பிக் பாஸ்' அமீர், பாவ்னி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் ஜோடி சேர்ந்த ‘பிக் பாஸ்’ அமீர், பாவ்னி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் கூட அமீரும் பாவனியும் சேர்ந்து சுற்றி திரிந்து கொண்டிருப்பதால் பல வதந்திகள் பரவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

பிபி ஜோடிகள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாகவே அறிமுகமாகி பல்வேறு வதந்திகளை கிளப்பியவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். அமீர் 50 ஆவது நாளில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளில் இருந்தே அமீர் பாவனியுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டு வந்தார். பிக் பாஸ் வீட்டில் இறுதி வாரம் வரை பாவனியும் அமீரும் தாக்குபிடித்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இருவரும் தனியாக அடிக்கடி பேசி வருவதால் பல கிசுகிசுக்கள் வந்துகொண்டிருந்தன. இந்த நிலையில் பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த விவகாரம் மேலும் கிசுகிசுவை அதிகப்படுத்தியது.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகவுள்ள பாரதி – இவருக்கு பதில் இனி இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!

பிக் பாஸ் வீட்டை விட்டு அமீர் மற்றும் பாவனி வெளியேறிய பிறகும் கூட இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்று வந்தனர். இதனால் இருவரும் காதலித்து வருகிறார்கள் என மக்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. இந்த வதந்திகள் குறித்து பாவனி மற்றும் அமீர் இருவருமே எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இதனால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பதால் இருவரும் காதலித்து வருவதாக மேலும் மேலும் வதந்திகள் பரவ தொடங்கியது.

Exams Daily Mobile App Download

 

பாவனியிடம் நீங்கள் எப்போது அமீரை திருமணம் செய்ய போகிறீர்கள் எனவும் ரசிகர்களின் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. அதற்கு பாவனி எனக்கு வீட்டில் மாப்பிளை பார்த்து கொண்டிருக்கிறார்கள். நானும் பாவனியும் சிறந்த நண்பர்கள், நீங்கள் நினைப்பது போல எதுவும் கிடையாது என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆட போகிறார்கள். இதற்கு பிறகு என்னென்ன வதந்திகள் பரவ காத்திருக்கிறதோ பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!