தமிழக அருவியில் குளிக்க தொடரும் தடை – கனமழை நீடிப்பு!

0
தமிழக அருவியில் குளிக்க தொடரும் தடை - கனமழை நீடிப்பு!
தமிழக அருவியில் குளிக்க தொடரும் தடை - கனமழை நீடிப்பு!
தமிழக அருவியில் குளிக்க தொடரும் தடை – கனமழை நீடிப்பு!

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கன மழை பெய்து வரும் காரணத்தினால் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை நீடிப்பு:

தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதி முதல் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில தினங்களில் உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்திற்கான கனமழை எச்சரிக்கை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் மாசிலா அருவி, நம்மருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா தலங்களில் தொடர்ந்து வெள்ளம் கொட்டி வருகிறது.

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்க திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!!

நவம்பர் 5ஆம் தேதி முதல் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழை காரணமாக படிக்கட்டுகளில் பாசிகள் படர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பயணிகளின் நலன் கருதி சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கான தடை எட்டாவது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 200 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியில் கொட்டும் அருவி நீர் அச்சம் தரக்கூடிய வகையில் உள்ளது. மேலும் விடுமுறை சமயங்களில் அருவியில் குளிப்பதற்கான தடை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!