தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்ட அரசு ஊழியர்களுக்கு அரசு அலுவலர் சார்பில் அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அரசு ஊழியர்கள் நேர்மறையாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அடிப்படை பயிற்சி:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு, அரசு ஊழியர்களை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இதன் மூலம் ஏராளமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து சம்பள உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? பெற்றோர்கள் கோரிக்கை!

மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இடைவிடாது பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு வழங்க அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சாா்பில் அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மொத்தம் 37 நாட்கள் இப்பயிற்சி முகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள குஜிலியம் பாறை சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இந்த பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் உலக நாடுகள் – நீடிக்கும் பதற்றம்!

இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர், மக்களுக்கு ஆற்றும் சேவை என்பதை உணர்ந்து அரசுப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறும் கோரிக்கை மனுக்கள் மீது சட்டத்துக்குட்பட்டு விரைவாகவும், பணிவாகவும் செயல்பட வேண்டும். விதிமுறைகளுக்குள் பட்டு நோ்மறையான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். எந்த ஒரு மனு மீதும் தீர்வு காணும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here