விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பள விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில், இது குறித்த முழு தகவல்களையும் இப்பதிவில் காணலாம்.

பாரதி கண்ணம்மா

தமிழ் சின்னத்திரையில் சுமார் 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக வெளியாகி வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் என தனித்தனி ஃபேன் பேஸ் இருக்கிறது. இப்படிப்பட்ட சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் வழக்கமாக நாள் கணக்கில் சம்பளம் பெற்று வருகின்றனர்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய எச்சரிக்கை! மார்ச் 31 கடைசி நாள்!

பொதுவாக ஒரு மாதத்தில் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை ஷெட்யூல் கொண்ட சீரியலில், ஒருவர் எவ்வளவு நாட்கள் நடிக்கிறார்கள் என்பதை பொறுத்து இந்த சம்பளம் நிர்ணயிக்கப்படும். இந்த தொகை ஒவ்வொரு ஆர்டிஸ்டுகளுக்கும் வேறுபடுவது உண்டு. குறிப்பாக பல ஆண்டு காலமாக சீரியல்களில் நடித்து வரும் சீனியர் நடிகர், நடிகைகளுக்கு அதிகளவு சம்பளமும், மற்றவர்களுக்கு அவர்களின் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற படி சம்பளம் வழங்கப்படுகிறது. வழக்கமாக ஒரு சீரியலில் லீட் ரோலில் நடிப்பவர்கள் தான் அதிகளவு சம்பளம் பெறுவார்கள்.

அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் நடிகை வினுஷா தேவி ஒரு நாளைக்கு, ரூ.10,000 முதல் 12,000 வரை சம்பளமாக பெறுகிறார். அதே போல பாரதியாக வரும் நடிகர் அருண் பிரசாத் ஒரு நாளைக்கு ரூ.20,000, சௌந்தர்யாவாக வரும் ரூபா ஸ்ரீ ஒரு நாளைக்கு ரூ.15,000, வேணுவாக வரும் ரிஷி கேசவ் ஒரு நாளைக்கு ரூ.12, 000, வெண்பாவாக வரும் பரீனா ரூ.10, 000, அகிலனாக வரும் சுகேஷ் ரூ.10,000, அஞ்சலியாக வரும் கண்மணி ரூ.9,000, ஹேமாவாக வரும் லிசா ஒரு நாளைக்கு ரூ.8,000 மற்றும் லட்சுமியாக வரும் ரக்ஷா ஒரு நாளைக்கு ரூ.8,000 என சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!