கண்ணம்மாவிற்கு ரோஜா செடி வாங்கி செல்லும் பாரதி – காதல் காட்சிகளுடன் வெளியான ப்ரோமோ!!

0
கண்ணம்மாவிற்கு ரோஜா செடி வாங்கி செல்லும் பாரதி - காதல் காட்சிகளுடன் வெளியான ப்ரோமோ!!
கண்ணம்மாவிற்கு ரோஜா செடி வாங்கி செல்லும் பாரதி - காதல் காட்சிகளுடன் வெளியான ப்ரோமோ!!
கண்ணம்மாவிற்கு ரோஜா செடி வாங்கி செல்லும் பாரதி – காதல் காட்சிகளுடன் வெளியான ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பல மாதங்களுக்கு பின்னர் பாரதி, கண்ணம்மாவின் காதல் காட்சிகள் இடம்பெற்று வருகிறது. இது குறித்த புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

புதிய ப்ரோமோ:

சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி இடம் உள்ளது. குறிப்பாக பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து அவர்களின் இரட்டை குழந்தைகள் அப்பா, அம்மா என தனித்தனியாக வளர்ந்து வருகின்றனர். கண்ணம்மாவுடன் ஹேமா பழகுவதை தடுக்க பாரதி அமெரிக்கா செல்ல திட்டமிடுகிறார். ஆனால் ஹேமாவிற்கு செல்ல விருப்பமில்லாத ஏக்கத்தில் உடம்பு சரியில்லாமல் போக அதற்கு ஒரே மருந்து கண்ணம்மா தான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிகளை மீண்டும் திறப்பது மாநில அரசுகள் முடிவு – மத்திய அரசு தகவல்!

இந்நிலையில் பாரதி, ஹேமாவை கண்ணம்மா வீட்டில் கொண்டுபோய் விடுகிறார். ஹேமாவிற்கு ஏசி புக் செய்து கண்ணம்மா வீட்டிற்கு அனுப்ப அதனை திருப்பி அனுப்புகிறார் கண்ணம்மா. அதனால் மிகுந்த கோபத்தில் பாரதி இருக்கிறார். இந்நிலையில் ஹேமா மீது பாசம் காட்டுவதை பார்த்து லட்சுமி பொறாமைப்பட்டு கோபப்படுகிறார். ஏற்கனவே பாரதி, கண்ணம்மா, ஹேமா, லட்சுமி ஒன்றாக இணைந்து உணவு சாப்பிடுவது போல வெளியான புகைப்படம் மத்தியில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பிரசாந்த்திடம் கண்ணன் மீது உள்ள காதல் குறித்து சொல்லும் ஐஸ்வர்யா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இன்றைய எபிசோட்!!

அதில் ஹேமாவுடன் பாரதி வீடியோ காலில் பேசுகிறார். அப்போது பாரதி I Love U சொல்லி முத்தம் கொடுக்கிறார். அதனை பார்த்த கண்ணம்மாவிற்கு பழைய ஞாபகங்கள் வருகிறது. பிறகு பாரதியின் காரை சௌந்தர்யா பின் தொடர்ந்து செல்கிறார். பாரதி ரோஜா செடிகள் வாங்கி கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். பாரதி. கண்ணம்மா இணைந்து செடிகளை நட்டு வைக்கின்றனர். அப்போது கண்ணம்மா விரல்கள் பாரதி மீது பட இருவரும் பழைய நினைவுகளுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். பல மாதங்களுக்கு பின்னர் பாரதி, கண்ணம்மா காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது.

சரவணனின் கடைக்கு சீல் வைக்கும் அரசு அதிகாரி, சந்தியாவின் புத்திசாலித்தனமான நடவடிக்கை – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

பின்னர் கண்ணம்மா சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு பாரதி நன்றாக உள்ளது என தெரிவிக்க, அதனை ஒளிந்து கொண்டு பார்த்த சௌந்தர்யா சந்தோசப்படுகிறார். வீட்டில் சமைத்தால் அதனை குறை சொல்லுவ, வீட்டிற்கு வா இருக்கு என்று மனதில் நினைத்து சிரித்து கொள்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் மேலும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!