ரோஹித் வீட்டிற்கு வந்ததை நினைத்து கடுப்பாகும் வெண்பா, பாரதியிடம் கேள்விகளை கேட்ட ஹேமா – இன்றைய எபிசோட்!

0
ரோஹித் வீட்டிற்கு வந்ததை நினைத்து கடுப்பாகும் வெண்பா, பாரதியிடம் கேள்விகளை கேட்ட ஹேமா - இன்றைய எபிசோட்!
ரோஹித் வீட்டிற்கு வந்ததை நினைத்து கடுப்பாகும் வெண்பா, பாரதியிடம் கேள்விகளை கேட்ட ஹேமா - இன்றைய எபிசோட்!
ரோஹித் வீட்டிற்கு வந்ததை நினைத்து கடுப்பாகும் வெண்பா, பாரதியிடம் கேள்விகளை கேட்ட ஹேமா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என பாரதி சொன்னதால் ஸ்வீட் கொடுத்து கண்ணம்மா சந்தோசப்படுகிறார். மறுபக்கம் வெண்பா வீட்டிற்கு ரோஹித் வந்ததை நினைத்து வெண்பா கோபப்படுகிறார். பின் ஹேமா பாரதியிடம் கேள்வி கேட்க பாரதி விவாகரத்து வாங்கவில்லை என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் நர்ஸ் ஒருவர் வந்து பாரதிக்கு ஸ்வீட் கொடுக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் என்பதால் பாரதி இரண்டு எடுத்துக் கொள்கிறார். அப்போது பாரதி என்ன விசேஷம் என கேட்க அப்போது நர்ஸ் அட்மின் ஆபிசர் தான் கொடுக்க சொன்னதாக சொல்கிறார். நடந்து முடிந்த நிகழ்ச்சியில் வெண்பாவை நான் காதலிக்கவில்லை என சொன்னதால் தான் அவர் சந்தோசமாக இருக்கிறாள் போல என பாரதி நினைக்கிறார். பின் கண்ணம்மா வந்து ஆபிஸ் வேலையாக பேச அப்போது பாரதி எதற்கு ஸ்வீட் கொடுத்தாய் என கேட்கிறார்.

கண்ணம்மா சும்மா தான் ஏன் சும்மா கொடுக்க கூடாதா என சொல்கிறார். பின் பாரதி கோபத்துடன் வீட்டிற்கு கிளம்பி செல்கிறார். அப்போது நர்ஸ் வந்து பார்க்க பாரதி போனை வைத்து விட்டு சென்றுவிட்டார். உடனே நர்ஸ் போனை எடுத்து வந்து கண்ணம்மாவிடம் கொடுக்கிறார். கண்ணம்மா போனை மறக்கும் அளவிற்கு கோவம் என நினைக்கிறார். பின் வெண்பா வீட்டில் கோவமாக இருக்க ரோஹித் வந்து ஆன்டி ஒரு வாரத்தில் போறேன் என சொன்னார் ஆனால் ஒரே நாளில் சென்றுவிட்டார் என என சொல்கிறார். அப்போது வெண்பா சோகமாக இருக்க ஆன்டி போனதால் சோகமாக என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அதான் நான் வந்துவிட்டேன் நீயும் நானும் ஒரே ரூமில் இருப்போம் என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார். அதெல்லாம் இப்போதைக்கு இல்லை நீ கீழே படுத்துக் கொள் நான் மேலே இருக்கும் ரூமில் படுத்துக் கொள்கிறேன் என ரோஹித் சொல்கிறார். பின் வெண்பா உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என சொல்ல ஆனால் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என சொல்கிறார். வெண்பா நான் உன்னை வெறுக்கிறேன் என சொல்ல ரோஹித் நான் உன்னை காதலிக்கிறேன். உன் வாயால் என்னை காதலிப்பதாக சொல்ல வைப்பேன் என ரோஹித் சொல்கிறார்.

வெண்பா ரோஹித்தை நினைத்து கோவமாக இருக்க சாந்தி ஷர்மிளா அம்மா சொன்னார் இந்த ரோஹித் சாதாரண ஆள் இல்லை. பெரிய கோடிஸ்வரன் அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தான் கல்யாணத்துக்கு சம்மதித்தாக நினைக்கிறீர்கள் ஆனால் அப்படி எல்லாம் இல்லை அவருடைய சொத்து மதிப்பே மிக பெரியது என சொல்ல வெண்பா அவன் சொத்து மதிப்பு பார்த்து நான் திருமணம் செய்ய முடியாது எனக்கு என் காதல் தான் முக்கியம் என சொல்கிறார்.

தீவிரமடையும் அக்னிபத் திட்டம், திரும்ப பெற வாய்ப்பில்லை – ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் உறுதி!

பின் குடும்பத்தில் அனைவரும் பேசிக் கொண்டிருக்க அப்போது ஹேமா தூங்காமல் வருகிறார். இன்னும் தூங்கவில்லையா என கேட்க அப்பா எப்போதும் நான் தூங்கியதும் தான் வருகிறார். இன்னைக்கு அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என சொல்லி காத்திருப்பதாக சொல்கிறார். அப்போது பாரதி வர அவரிடம் ஹேமா பல கேள்விகளை கேட்கிறார். என்னுடைய அம்மாவிற்கு ஏன் விவாகரத்து கொடுக்க போறீங்க என்னுடைய அம்மா அப்போ உயிரோடு தான் இருக்காங்களா என கேட்கிறார். அந்த நேரம் கண்ணம்மா பாரதி போனை எடுத்துக் கொண்டு வருகிறார். ஹேமா கேள்வி மீது கேள்வி கேட்க பாரதி உங்க அம்மா சாமிகிட்ட போய்ட்டாங்க நான் யாருக்கும் விவாகரத்து கொடுக்கவில்லை என சொல்ல அப்போது கண்ணம்மா வருகிறார். ஹேமா கண்ணம்மாவை பார்த்து சமையல் அம்மா என கத்திக் கொண்டே மயக்கம் போட்டு விழுகிறார். அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!